கடந்த தொடர் வரை ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும் சரிவராது, ஒருவரையொருவர் முறைத்துக் கொள்வது, வசைகளை பரிமாறிக்கொள்வது, களத்தில் கிண்டல் கேலி என்று இருவரும் 2014 முதல் சளைக்காமல் பகைமையை வளர்த்து வந்தனர், கடந்த தொடரில் பும்ராவை விட்டு பவுன்சர்களாக வீசித்தள்ளி ஆண்டர்சனை காயப்படுத்தும் முயற்சியில் நடந்த வாக்குவாதம் வரை கோலி-ஆண்டர்சன் பகை உச்சம் தொட்ட நிலையில் இன்று சமாதானம் பிறந்திருக்கிறது.
விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் நேற்று எட்ஜ்பாஸ்டனில் பேசி சிரித்து மகிழும் போட்டோவை ஐசிசி பகிர்ந்து இதற்குத் தலைப்புக் கொடுக்கக் கோரி வாசகர்களைத் தூண்ட அவர்களும் வந்து தலைப்புகளை இட்டு இந்தப் படத்தை வைரலாக்கியுள்ளனர்.
Caption this ✍️#WTC23 | #ENGvIND | 📝 https://t.co/h6av5ZWkOk pic.twitter.com/j8tWCPsFXj
— ICC (@ICC) July 1, 2022
Caption this ✍️#WTC23 | #ENGvIND | 📝 https://t.co/h6av5ZWkOk pic.twitter.com/j8tWCPsFXj
— ICC (@ICC) July 1, 2022
Two greats of Modern ERA - Virat Kohli and James Anderson. pic.twitter.com/DHNPApXgU2
— Johns. (@CricCrazyJohns) July 1, 2022
Two greats of Modern ERA - Virat Kohli and James Anderson. pic.twitter.com/DHNPApXgU2
— Johns. (@CricCrazyJohns) July 1, 2022
ஆண்டர்சன் இதுவரை கோலியை 7 முறை அவுட் செய்துள்ளார். இந்நிலையில் ஆண்டர்சனுக்கும் வயதாகி விட்டது, கோலியும் அடுத்த இங்கிலாந்து தொடரில் இருந்தாலும் ஆண்டர்சன் நிச்சயம் ஓய்வு பெற்றிருப்பார், எனவே இந்த புகைப்படம் நட்பின் அடையாளமாய், பகைமையை விரட்டுவதாக குறியீடாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.