Home /News /sports /

Ind vs Eng Rishabh Pant-டாப் ஆர்டர் ஏத்தி விட்ட இங்கிலாந்து பவுலிங்கை காமெடியாக்கிய ரிஷப் பண்ட் 

Ind vs Eng Rishabh Pant-டாப் ஆர்டர் ஏத்தி விட்ட இங்கிலாந்து பவுலிங்கை காமெடியாக்கிய ரிஷப் பண்ட் 

223 ரன்கள் கூட்டணி அமைத்த ஜடேஜா, பண்ட்

223 ரன்கள் கூட்டணி அமைத்த ஜடேஜா, பண்ட்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் இங்கிலாந்து பவுலிங்கை ஏதோ உலக மகா பவுலிங் போல பம்மி பம்மி ஆட ரிஷப் பண்ட் இறங்கி ஏய் இதெல்லாம் ஒண்ணுமில்லப்பா காமெடி என்று காட்டி விட்டார். 64/3 என்ற போது இறங்கினார், பிறகு 98/5-ல் ஜடேஜா அவருடன் சேர்ந்தார்.

மேலும் படிக்கவும் ...
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் இங்கிலாந்து பவுலிங்கை ஏதோ உலக மகா பவுலிங் போல பம்மி பம்மி ஆட ரிஷப் பண்ட் இறங்கி ஏய் இதெல்லாம் ஒண்ணுமில்லப்பா காமெடி என்று காட்டி விட்டார். 64/3 என்ற போது இறங்கினார், பிறகு 98/5-ல் ஜடேஜா அவருடன் சேர்ந்தார்.

மழை குறுக்கிட்ட முதல் நாள் ஆட்டத்தில் 73 ஓவர்கள்தான் வீசப்பட்டது இதில் இந்தியா 338/7, ரன் ரேட் 4.63.ரிஷப் பண்ட் சாத்தி எடுக்க ஜடேஜா அவருக்குப் பக்க பலமாக பிரமாதமான ஆஃப் சைடு ஷாட்களுடன் ஆடி இறுதியில் 83 நாட் அவுட், இன்று சதம் அடிக்க வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் நாம் மறுக்க முடியாது, டியூக் பந்துகள் 30 ஒவருக்குப் பிறகு அதன் கடினத்தன்மையை இழந்து மென்மையாகி விடுகிறது. மேலும் ஜேமி ஓவர்டனை எடுக்காமல் ஜாக் லீச்சை வைத்துக் கொண்டதன் பலனும் தெரிந்தது. மேலும் வயதான ஆண்டர்சன், பிராடையே அதிகம் நம்பியிருக்கும் டெப்த் இல்லாத இங்கிலாந்து பவுலிங் வரிசை.

இந்திய டாப் ஆர்டரில் ஷுப்மன் கில் நம்பிக்கை அளிக்கிறார், மற்றபடி புஜாரா, விஹாரி, கோலி சுத்த விரயம் போல் தெரிகிறது, அதுவும் தயங்கித் தயங்கி ஆடியே கோலி பவுல்டு ஆனார். முன்காலில் வந்து நல்ல ஃபார்வர்ட் டிபன்ஸ் ஆடவேண்டிய பந்தை ஹனுமா விஹாரி கிரீசிலிருந்தபடியே வாங்கி எல்.பி.ஆனார். புஜாரா வழக்கம் போல் எட்ஜ், ஷுப்மன்கில்லும் வழக்கம் போல் எட்ஜ். ஷ்ரேயஸ் அய்யர் பிரிஸ்க்காகத் தொடங்கினார், ஆனால் ஷார்ட் பிட்ச் பந்து வீக்னஸ் என்றால் வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷார்ட் பிட்ச் பந்திலுமா பலவீனம்? லெக் திசையில் பவுண்டரி விளாச வேண்டிய ஆண்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்தார்.

இப்படி ஏதோ பெரிய இங்கிலாந்து பவுலிங்கை இவர்கள் பூச்சாண்டியாக்க, இறங்கினார் ரிஷப் பண்ட், இது ஒன்றுமல்ல காமெடி என்று ஆடினார். ஜாக் லீச் இந்தியாவின் ஆபத்பாந்தவர் 32 பந்துகளில் ரிஷப் பண்ட் இவரை 59 ரன்கள் விளாசினார்.இவர் இத்தனைக்கும் ஆன் திசையில் 6 பீல்டர்களை வைத்துக் கொண்டு வீசினார், ஆனாலும் பண்ட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. 3 பீல்டர்கள் பவுண்டரியை கவர் செய்தும் அவர்கள் தலைக்கும் மேல் 101 மீ சிக்ஸ் பறந்தது, ஒரு கை சிக்ஸ் பறக்கிறது. சரி பிளைட் செய்தால் பந்தும் மைதானத்துக்கு வெளியே பிளைட் ஆகிறது என்று அவர் பிளாட்டாக வீசினால் அதை ஸ்வீப், கொசு அடிப்பது போல் ஸ்கொயர் லெக்கில் கதறவிடுவது, இந்தப் பந்தை விட்டால் அவர் எல்.பி. ஆவார், ஆனாலும் கவலையில்லை என்று ஆடினார்.

தொடக்கத்தில் ஆண்டர்சனை அபாரமாக நேராக ஆடி 2 பவுண்டரிகளை அடித்தார், பிறகு பாட்ஸ் என்பவர் வந்தார் அவருக்கென்றே பேக்ஃபுட் ஆஃப் சைடு பஞ்ச் ஷாட்களை வைத்திருந்தார், பவுண்டரிகள் பறந்தது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பாட்ஸ் 5 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்தார். ஜாக் லீச் 9 ஒவர் 71 ரன். பாட்ஸ் முதல் 7 ஓவரில் 21 என்று இருந்தவர் அடுத்த 10 ஓவர்களில் 64 ரன்கள் விளாசப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் நோ-பால்களையும் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் மட்டுமே வீசினார் ரிஷப் பண்ட் இவருக்கு புல், கட், ஹூக் ஷாட்களை வைத்திருந்தார், ஆண்டர்சனுக்கு ரிவர்ஸ் ஷாட்டும் உண்டு. ஜோ ரூட் வந்தார் அவரை சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார், கடைசியில் அவர் வீசிய வைடு பந்தில் கேட்ச் ஆனார்.

ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் என்று எல்லாம் ஆடிவிட்டார், பாட்ஸ் பந்துகளுக்கு பேக்ஃபுட் பஞ்ச்களை ஒதுக்கி வைத்திருந்தார், ஜாக் லீச்சுக்கு ஒரு கை சிக்ஸ் உட்பட டவுன் த ட்ராக் ஷாட்களை ஒதுக்கி வைத்தார், பென் ஸ்டோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு கட், புல், ஹூக் ஷாட்களை ஒதுக்கி வைத்தார். 89 பந்துகளில் சதம் கண்டு இங்கிலாந்தில் அதிவேக சதம் கண்ட 2வது வீரர் ஆனார். 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனதால் எட்ஜ்பாஸ்டனில் கில்கிறிஸ்டின் 152 ரன் அதிக ஸ்கோரை முறியடிக்க முடியவில்லை.

அதாவது காலையில் பயங்கரமாக இருந்த இங்கிலாந்து பவுலிங் ரிஷப் பண்ட், ஜடேஜாவினால் காமெடி பீஸ் ஆகி விட்டது, ஒரு கட்டத்தில் யாருக்குமே லைன் மற்றும் லெந்த் கிடைக்கவில்லை, காரணம், ரிஷப் பண்ட் எங்கு சுழற்றுவாரோ என்ற பயம் தான். என்ன பெரிய மெக்கல்லம் பார்முலா, இவருக்கு முன்னமேயே ரிஷப் பண்ட் இப்படித்தான் ஆடிவருகிறார். உண்மையில் மெக்கல்லமுக்கு முன்னால் ஜெயசூரியா, ஆரம்பகால சச்சின், ஆடம் கில்கிறிஸ்ட், ஏன் ஆஸ்திரேலியாவே ஸ்டீவ் வாஹ் கேப்டன்சியில் ஓவருக்கு 4.50 என்ற ரன் விகிதத்தில் குவித்தவர்கள்தான்.

மெக்கல்லம் 54 பந்துகளில் அதிவேக சதம் எடுத்த இன்னிங்ஸில் கூட நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்கவே செய்தது. ஏனெனில் இவர்கள் 330 ரன்கள் எடுத்தார்கள் என்றால் ஆஸ்திரேலியா 500+ ரன்களைக் குவித்தனர். அதே போல் இங்கிலாந்து விரைவில் ரன் குவித்தால் என்ன? எனவே இந்த ஆக்ரோஷம், பாசிட்டிவ் என்பதெல்லாம் இந்தியாவும் பார்த்ததுதான், அதைத்தான் இப்போது காட்டியிருக்கிறது.

இன்று எப்படியாவது 400 ரன்களுக்கும் கொஞ்சம் கூடுதலாக எடுத்து விட்டால் போதும். அதன் பிறகு அவர்கள் எத்தனை வேகமாக ரன் எடுத்தால் என்ன? வேகத்துக்கேற்ப விக்கெட்டுகளும் போகும். அங்குதான் இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ரிஷப் பண்ட் உருவாக்கி கொடுத்துள்ளார், 2வது இன்னிங்சில் காட்டும் ஆக்ரோஷத்தில் இங்கிலாந்துக்கு தோல்வி பயத்தை உருவாக்க வேண்டும்.
Published by:Muthukumar
First published:

Tags: India Vs England, Rishabh pant, Test match

அடுத்த செய்தி