Home /News /sports /

டெஸ்ட் கேப்டன் பும்ரா: இவர்கள் வழியைக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!

டெஸ்ட் கேப்டன் பும்ரா: இவர்கள் வழியைக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!

ஆசியாவின் இரு பெரிய கேப்டன்கள் கபில்தேவ், இம்ரான் கான்

ஆசியாவின் இரு பெரிய கேப்டன்கள் கபில்தேவ், இம்ரான் கான்

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியிலிருந்து கோவிட் காரணமாக ரோஹித் சர்மா விலகியதையடுத்து கபில்தேவுக்குப் பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை டெஸ்ட் அரங்கில் 5 வேகப்பந்து வீச்சு கேப்டன்கள் வெற்றிகரமாக நடைபோட்டுள்ளனர், அவர்கள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்:

மேலும் படிக்கவும் ...
  இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியிலிருந்து கோவிட் காரணமாக ரோஹித் சர்மா விலகியதையடுத்து கபில்தேவுக்குப் பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை டெஸ்ட் அரங்கில் 5 வேகப்பந்து வீச்சு கேப்டன்கள் வெற்றிகரமாக நடைபோட்டுள்ளனர், அவர்கள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்:

  பும்ரா இந்திய அணியின் 36-வது கேப்டனாக இருப்பார். கபில்தேவுக்குப் பிறகு 35 ஆண்டுகள் சென்று இப்போது ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்குக் கேப்டனாக்கப்பட்டுள்ளார், மிக அபத்தமானது, கடந்த தொடரின் தொடர்ச்சி எனும்போது விராட் கோலியையே கேப்டனாக்கியிருக்கலாம்.

  உலகின் 5 வெற்றிகரமான வேகப்பந்து கேப்டன்களைப் பார்ப்போம்:

  1. கபில்தேவ்:


  kapil dev


  இந்திய கிரிக்கெட்டின் திருப்பு முனை, உலகக்கோப்பை 1983 வென்று இந்திய கிரிக்கெட் பக்கம் உலகைத் திரும்பச் செய்தார், இன்று பிசிசிஐ இவ்வளவு சம்பாதிப்பதற்கு மூலகர்த்தா கபில்தேவ் தான், ஏனெனில் அவர்தான் இந்திய இளைஞர்களிடத்தில் கிரிக்கெட் பற்றிய ஆர்வத்தையும் விளையாட்டையும் தூண்டியவர். 1987 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை இந்திய அணியை இட்டுச் சென்றார். டெஸ்ட் போட்டிகளில் ஒருமுறை ஆஸ்திரேலியாவை அங்கு டெஸ்ட் தொடரில் வீழ்த்தும் முதல் துணைக்கண்ட அணியாக இந்தியாவை பெருமை கொள்ளச் செய்திருப்பார், ஆஸ்திரேலியாவின் நடுவர் மோசடிகளால் அது நிறைவேறவில்லை, ஆனால் இங்கிலாந்தை ஒருமுறை 1986 தொடரில் 2-0 என்று வெற்றி பெற்றார். இவரது கேப்டன்சியில்தான் டெஸ்ட் வரலாற்றின் 2வது டெஸ்ட் டை சென்னையில் நடந்தது. ஷேன் வார்ன் இவரை தன் ஆல்டைம் வேர்ல்ட் லெவன் அணியில் வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

  இம்ரான் கான்:

  கோப்புப் படம்


  இவரை கேப்டன்களின் கேப்டன் என்றுதான் கூற வேண்டும். இவரும் 1992 உலகக்கோப்பையை வென்றவர், பாகிஸ்தான் அணியில் இளம் ரத்தங்களைக் கொண்டு வந்து புகுத்தியவர். இன்சமாம் உல் ஹக், ரமீஸ் ராஜா, சலீம் மாலிக், மோசின் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அனைத்துக்கும் மேலாக லெக் ஸ்பின் கொடையாளர் அப்துல் காதர் போன்றவர்களை இவர்தான் அறிமுகம் செய்தார். பாகிஸ்தானை 48 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய இம்ரான் கான், 14 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார், அதில் பெங்களூருவில் இந்தியாவை 1-0 என்றுவீழ்த்தி தொடரை வென்றதும் அடங்கும். 139 ஒருநாள் போட்டிகளில் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் 75 போட்டிகளில் வென்றுள்ளது, மிகப்பெரிய கேப்டன்.

  ஹீத் ஸ்ட்ரீக்: ஜிம்பாப்வேயின் ஒரு ஆளுமையான வேகப்பந்து வீச்சு கேப்டன். இந்திய அணியை ஒருமுறை டெஸ்ட் போட்டியில் மண்ணைக் கவ்வச் செய்தார், வங்கதேசத்தை 2-0 என்று வீழ்த்தினார். 11 டெஸ்ட் போட்டிகளில் 4-ல் வென்றுள்ளார். 18 ஒருநாள் போட்டி வெற்றிகளையும் சாதித்துள்ளார்.

  ஷான் போலக்:

  இவரை அறிமுகம் செய்த குருநாதர் ஹான்சி குரோனியே சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் பிரமாதமான தொடக்கம் களங்கமடைந்த போது போலாக் கேப்டன்சியை ஏற்றார், கிட்டத்தட்ட இங்கு கங்குலி இப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் கேப்டன் ஆனார். 26 டெஸ்ட் போட்டிகளில் 14ஐ வென்றுள்ளார், 92 ஒருநாள் போட்டிகளில் 59 வெற்றிகளைப் பெற்றுள்ளார். 2003 உலகக்கோப்பையில் டி.எல்.எஸ்.முறையில் இலக்குக்கும் வெற்றி ரன்னுக்கும் வித்தியாசம் தெரியாமல் இலங்கைக்கு எதிராக தோற்றதையடுத்து கேப்டனாக நீக்கப்பட்டார்.

  வாசிம் அக்ரம்:

  இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு கட்டுரையே தேவைப்படும். சுல்தான் ஆஃப் ஸ்விங் மட்டுமல்ல யார்க்கர் கிங், இவரது ஓப்பனிங் ஸ்பெல்லில் கால்கள் நடுங்காத தொடக்க வீரர்களே இல்லை என்று கூறிவிட முடியும். 1999 உலகக்கோப்பை இறுதி வரை வந்தார். 25 டெஸ்ட்டில் பாகிஸ்தானை 12 வெற்றிகளுக்கும் 109 ஒருநாள் போட்டிகளில் 66 வெற்றிகளையும் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட்டை உச்சத்துக்குக் கொண்டு சென்றார்.

  இவர்கள் எல்லோரையும் விட பெரிய மேதை மே.இ.தீவுகளின் கேரி சோபர்ஸ், வேகப்பந்து வீச்சுடன் கேப்டன்சியில் வெஸ்ட் இண்டீஸை ஒரு பெரிய அணியாகக் கொண்டு நிறுத்தி இவரது வழிதோன்றல்கள் வெஸ்ட் இண்டீஸை 1990கள் வரை கொஞ்சம் உச்சத்தில் வைத்திருக்க உதவியது.

  கிளைவ் லாய்ட் கேப்டனாவதற்கு முன்பு மீடியம் ஃபாஸ்ட் பவுலர்தான், அதே போல் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஆசிப் இக்பால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர்தான்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India Vs England, Jasprit bumrah, Test match

  அடுத்த செய்தி