Home /News /sports /

IND vs ENG, 2nd OdI-இங்கிலாந்து உலகக்கோப்பை வென்ற நாளான இன்று இந்தியா வென்று தொடரை வெல்ல தீவிரம்

IND vs ENG, 2nd OdI-இங்கிலாந்து உலகக்கோப்பை வென்ற நாளான இன்று இந்தியா வென்று தொடரை வெல்ல தீவிரம்

லார்ட்ஸில் இன்று 2வது ஒருநாள் போட்டி

லார்ட்ஸில் இன்று 2வது ஒருநாள் போட்டி

ஜூலை 14, இன்று லார்ட்ஸில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியையும் வென்று ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் லார்ட்ஸில் இங்கிலாந்து நியூசிலாந்தை சர்ச்சைக்குரிய முறையில் வீழ்த்தியது நினைவிருக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
    ஜூலை 14, இன்று லார்ட்ஸில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியையும் வென்று ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் லார்ட்ஸில் இங்கிலாந்து நியூசிலாந்தை சர்ச்சைக்குரிய முறையில் வீழ்த்தியது நினைவிருக்கலாம். உலகக்கோப்பை வென்ற தினமான இன்று வெற்றி பெறும் உறுதியிலும் இங்கிலாந்து களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம், அவர்களின் கனவை முறியடிக்க இந்தியா களமிறங்கும்.

    அன்று டை ஆன உலகக்கோப்பை போட்டியில் அசட்டுத்தனமான விதிமுறைகளால் அதிக பவுண்டரிகள் அடித்ததற்காக இங்கிலாந்து கோப்பையை பரிசாகப் பெற்றது. ஆனால் இன்று 90 மைல்கள் வேகம் வீசும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இந்திய பவுலர்கள் இங்கிலாந்துக்கு அந்தப்பரிசை வழங்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

    ஓவலில் இங்கிலாந்தின் விதந்தோதப்படும் புதிய ஆக்ரோஷ அணுகுமுறைக்கு இந்திய பவுலர்கள் பேரடி கொடுத்து ஆப்பு வைத்தனர். இங்கிலாந்து உண்மையிலேயே இந்தியாவுக்கு அடி கொடுக்க விரும்பினால் நல்ல ஸ்விங் ஆகும் கண்டிஷனில் பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோரை ஆடி, அடித்து பதிலடி கொடுக்க வேண்டும், அதுதான் செல்லும்.

    லார்ட்ஸில் இன்று வெயில் அதிகம் இருக்கும் அதாவது இங்கிலாந்து தட்பவெப்ப நிலைக்கு 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்கிறார்கள், எனவே கொஞ்சம் மேகமூட்டமாக இல்லாவிட்டால் இன்னொரு பேட்டிங் பிட்ச்தான் சாத்தியம் பெரிய இலக்கை விரட்டி ஜெயிக்கும் அணுகுமுறைதான் இருக்கும். பட்லருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் டாஸ் வெல்ல வேண்டும்.

    இந்தியாவைப் பொறுத்தவரை கோலி ஆடுவது சந்தேகம், ஸ்ரேயஸ் அய்யர்தான் ஆடுவார். பிட்ச் நார்மலாக இருந்தால் ஷிகர் தவான் நிச்சயம் ஒரு காட்டு காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம், ரோஹித் சர்மா செம பார்மில் இருக்கிறார், ஷார்ட் பிட்ச் போட்டல் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ், ஃபுல் லெந்தில் போட்டல் நேர் சிக்ஸ் என்பதாக அவர் அணுகுமுறை இருக்கும்.

    இங்கிலாந்து இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் உலகக்கோப்பையை வென்ற அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை இன்றும் தேவைப்படும். முதலில் வரிசையாக டக்குகள் அடிப்பதை இங்கிலாந்து வீரர்கள் நிறுத்த வேண்டும், குறிப்பாக ஜேசன் ராய். ஒருநாள் டி20 இரண்டிலும் 17 டக்குகள் அடித்துள்ளார் ஜேசன் ராய்.

    இந்திய அணி அநேகமாக மாற்றமிருக்காது, அதே ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷமி, பும்ரா, பிரசித் கிருஷ்னா, செஹல்.

    இங்கிலாந்து அணி உத்தேசமாக: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டன், மொயின் அலி, டேவிட் வில்லே, கிரெய்க் ஓவர்டன் / சாம் கரன், பிரைடன் கார்ஸ், ரீசி டாப்லி

    அன்று ஓவலில் இந்தியாவிடம் வாங்கிய நோ-லாஸ் உதை 2011க்கு பிறகு இங்கிலாந்து வாங்கியது. இதற்கு முன்னால் லார்ட்ஸில் கடைசியாக நடந்த 8 போட்டிகளில் இந்தியா 4-ல் வென்றுள்ளது.

    இங்கிலாந்து உலகக்கோப்பையை அதிர்ஷ்டத்தால் வென்ற நாளான இன்று அந்த அணியை முறியடிக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India captain Rohit Sharma, India Vs England, Virat Kohli

    அடுத்த செய்தி