ஆஸி. அணிக்கு அடுத்த அடி.. உலகக்கோப்பையில் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம்!

Elbow surgery rules #SteveSmith out of #IPL2019 | வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்கப் போவதில்லை.

news18
Updated: January 12, 2019, 7:59 PM IST
ஆஸி. அணிக்கு அடுத்த அடி.. உலகக்கோப்பையில் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம்!
வலைப்பயிற்சியில் கீழே விழுந்த ஸ்டீவ் ஸ்மித். (Cricket Australia)
news18
Updated: January 12, 2019, 7:59 PM IST
காயத்தால் அவதிப்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித்,  2019 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு இது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடந்த தென்னாஃப்ரிக்க டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. மற்றொரு வீரர் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

Smith, Warner, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித். (Reuters)


ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தியது. ஆனால், தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுத்தது.

Steve Smith, ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித். (Image: AP)


ஸ்டீவ் ஸ்மித் மீதான தடை வரும் மார்ச் மாதம் வரை இருப்பதால், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் டி-20 தொடரில் அவர் விளையாடி வந்தார். இந்நிலையில், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதன்பிறகு ஆறு வார காலம் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

Steve Smith, ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித். (AFP)
Loading...
இதனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இருந்து விலகியுள்ள ஸ்மித், வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இதனால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல், நேரடியாக 2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்மித் எப்படி பங்கேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Video: ராயுடுவால் ஆட்டமிழந்த தோனி.. எப்படி தெரியுமா?

Also Watch...

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...