மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் நாசமாவதற்கே டி20 தான் காரணம் என்று சொல்லப்படுகிறது, இந்த டி20 கிரிக்கெட்டையும் நாசம் செய்வதுதான் ஐபிஎல் என்று வேறொரு பார்வையும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் ஆஷஸ் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் ஆடுவதை கொஞ்சம் இங்கிலாந்து வாரியம் கட்டுப்படுத்தும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி மோசத்திலிருந்து அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது, சிட்னியில் ஏதோ வாச்சாம்பொழச்சான் என்று டிரா செய்தது, ஆனால் மெல்போர்னில் 82 ரன்களை எடுத்து மீண்டும் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய விடாமல் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்றும், ஒட்டுமொத்த ஆஷஸ் தோல்விக்கு என்ன காரணம் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் காரணங்களை தோண்ட முடிவு எடுத்துள்ளது.
ஆஷஸில் இங்கிலாந்து வீரர்களின் மோசமான ஆட்டம் இப்போது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வரவிருக்கும் தொடரில் அவர்களின் பங்கேற்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இங்கிலாந்தின் தோல்வி குறித்து முழு ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
Mirror.co.uk ஊடக அறிக்கையின்படி, கிரிக்கெட் இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் டெஸ்ட் அணியின் ஆட்டத்தை மேம்படுத்த பல பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு அறிக்கையைத் தயாரிக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல்லில் பங்கேற்பதைத் தடுப்பது ஒரு யோசனையாக இதில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்திய டி20 லீக் வழக்கமாக இரண்டு மாதங்கள் நீடிக்கும், இருப்பினும், இந்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் அறிமுகம் செய்யப்படுவதால் அது நீண்ட தொடராக இருக்கும். ஐபிஎல் 2022 இங்கிலாந்தின் டெஸ்ட் கோடையின் ஆரம்ப கட்டத்துடன் மோதுகிறது. ஏனெனில் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் நடைபெறும் தருணம் ஜூன் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான இங்கிலாந்தின் முதல் டெஸ்டுடன் இடிக்கிறது.
ஐபிஎல் 2022 வீரர்கள் ஏலம் பிப்ரவரியில் நடைபெற உள்ளது இதில் ஏராளமான இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி மட்டுமே அந்தந்த அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்கள், நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்காக, சில உள்நாட்டு ஆட்டங்களில் விளையாடுவதற்காக, இந்தியாவில் தங்கள் நேரத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மறுபுறம், முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஐபிஎல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக தற்போதைய வீரர்களை மீண்டும் மீண்டும் விமர்சித்துள்ளனர். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன், ரொக்கப்பணம் நிறைந்த டி20 லீக்கிற்கான தேசிய கடமைகளை கிரிக்கெட் வீரர்கள் தவறவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்.
"முன்னணி மல்டி ஃபார்மட் வீரர்களுக்கு ஏழு இலக்க சம்பளத்தொகைகள் வழங்கப்படுகின்றன, ஆனால், நம்பமுடியாத அளவிற்கு, இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இங்கிலாந்து வாரியம் ஆண்டுக்கு இரண்டு மாதங்களுக்கு வீரர்களை கைகழுவி விட்டு விடுகிறது இது ஏன்?" என்று டைம்ஸிற்கான தனது கட்டுரையில் ஆதர்டன் எழுதினார்.
Also Read: 10, 12 மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடத்துங்கள்.. அரசுக்கு கோர்ட் அறிவுறுத்தல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashes 2021-22, Australia vs England, IPL, IPL 2022