• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியாவில் பாதுகாப்புப் பிரச்சனை என்று எந்த அணியும் விலகாது, காரணம் பணம்: கவாஜா காட்டம்

இந்தியாவில் பாதுகாப்புப் பிரச்சனை என்று எந்த அணியும் விலகாது, காரணம் பணம்: கவாஜா காட்டம்

உஸ்மான் கவாஜா

உஸ்மான் கவாஜா

பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் உலகம் பாதுகாப்புக் காரணங்களுக்காக புறக்கணிப்பது புதிதல்ல, இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மாம் கவாஜா, "இதே நிலைமை இந்தியாவில் காணப்பட்டால் நிச்சயம் விளையாட முடியாது என்று யாரும் சொல்லமாட்டார்கள். காரணம் பணம். அங்கு பணம் பேசும் என்பதை அனைவரும் அறிவோம். அனேகமாக அது தான் கிரிக்கெட்டை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று காட்டம் காட்டியுள்ளார்.

  • Share this:
    பாகிஸ்தானில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்று இருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் களம் இறங்க மறுத்ததோடு தொடரை ரத்து செய்து விட்டு அவசரமாக தாயகம் திரும்பியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் பாகிஸ்தான் தரப்பிலிருந்து கிளம்பியுள்ளன.

    கோவிட் அச்சுறுத்தலின் போது வாக்சின் கூட கண்டுப்பிடிக்காத காலத்தில் இங்கிலாந்தில் சென்று பாகிஸ்தான் ஆடியது, ஆனால் இன்றோ பாதுகாப்பு முழுமையாக போடப்பட்டும் அதைக் காரணம் காட்டி அணிகள் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுகின்றன, நாம் எவ்வளவுதான் அடிபணிந்து போவது என்று ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்துள்ளதோடு இனி நாமும் வேலையைக் காட்டுவோம் என்று கூறியுள்ளார்.

    அதே போல் ஷோயப் அக்தர், உலகக்கோப்பை டி20யில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மீது அனைத்து கோபத்தையும் காட்டி போட்டு சாத்தி எடுத்து வெற்றி பெற வேண்டும், ஏன் கோப்பையையே வெல்ல வேண்டும் என்று உரத்தக் குரலில் பேசியுள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நியூஸிலாந்து, இங்கிலாந்து அணியைக் கண்டித்து கடுமையாகப் பேசியுள்ளார், “பாகிஸ்தானில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்று இருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் களம் இறங்க மறுத்ததோடு தொடரை ரத்து செய்து விட்டு அவசரமாக தாயகம் திரும்பியது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் பயணத்தை அதிரடியாக ரத்து செய்தது.

    பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி விலகுவதில், பாகிஸ்தானாக இருந்தால் எதிரணி வீரர்கள் முடியாது என்று எளிதில் சொல்லி பின்வாங்கி விடுகிறார்கள். வங்கதேசம் என்றாலும் அப்படி தான். இதே நிலைமை இந்தியாவில் காணப்பட்டால் நிச்சயம் விளையாட முடியாது என்று யாரும் சொல்லமாட்டார்கள். காரணம் பணம். அங்கு பணம் பேசும் என்பதை அனைவரும் அறிவோம். அனேகமாக அது தான் கிரிக்கெட்டை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பான இடம் என்று பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிரூபித்துள்ளது. அதனால் நாங்கள் ஏன் அங்கு மீண்டும் சென்று விளையாடக்கூடாது? போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது. அங்குள்ள மக்களும் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்க்கிறார்கள்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டில் விளையாடிய போது வீரர்களிடம் பேசியதில் இருந்து அவர்களும் கூட பாதுகாப்பு விஷயத்தில் திருப்தி தான் தெரிவித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது 100 சதவீதம் பாதுகாப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி பாகிஸ்தான் சென்று விளையாடினால் (1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சென்றதில்லை) மகிழ்ச்சி அடைவேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: