மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த வெய்ன் பிராவோ 2004-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் 270 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, ஓய்வு பெற உள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
கடைசியாக சொந்த நாட்டு அணியில் 2016-ம் ஆண்டு விளையாடிய பிராவோ, 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பல ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக மோதலில் இருந்த பிராவோ, ஐ.பி.எல். போன்ற டி20 தொடர்களில் விளையாடுவதையே விரும்பி வந்தார்.

விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடும் பிராவோ (கோப்புப் படம்)
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் உள்ளூர் அணிகள் சார்பில் அவர் களமிறங்கியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், இதுபோன்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்கத்தில் விளையாடிய பிராவோ, அதன் பின்னர், பல சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தமிழக ரசிகர்களின் மனங்கவர்ந்த வீரராக மாறிப்போனார். அதிரடி கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல், மைதானத்தில் பிராவோ ஆடும் நடனம் வைரல் ஹிட். ‘உலா’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிராவோ நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்..
குறைந்த இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்கள்: கிரிக்கெட்டின் ராஜாவான விராட் கோலி!
Also See..
Also Watch:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.