Home /News /sports /

டி-20 போட்டியில் புதிய உலகசாதனை படைத்த பிராவோ... சி.எஸ்.கே பாராட்டு

டி-20 போட்டியில் புதிய உலகசாதனை படைத்த பிராவோ... சி.எஸ்.கே பாராட்டு

459 போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரவோ

459 போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரவோ

459 போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரவோ

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ, டி-20 போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். PORT OF SPAIN -னில் கரீபியன் பிரீமியர் லீக் T-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் செயின்ட் லூசிஆ சவுக்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்தப் போட்டியில் பிராவோ, நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கினார்.

    அவர் சவுக்ஸ் அணியில் ரகீம் கோர்ன்வாலின் விக்கெட்டைக்கை கைப்பற்றியபோது, டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றார். 459 போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரவோ. டி20 போட்டிகளில் இதுவரை ஒரு பவுலர் கூட, 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையே எட்டவில்லை.

    இலங்கை கிரிக்கெட் அணியில் டி20 கேப்டன் லசித் மலிங்கா, பிராவோவுக்கு அடுத்தபடியாக 389 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த சுனில் நரேன் 383 விக்கெட்டுக்களையும், தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடும் இம்ரான் தஹிர் 374 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

    அதிக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாதனையைப் பொறுத்தவரை பிராவோ, இரண்டாவது இடத்தில் உள்ளார். மேற்கு இந்திய தீவுகளின் 50 ஓவர் அணி கேப்டன் கீரோன் பொலார்டு, அதிக ஆட்டங்கள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பிராவோ. இதுவரை சென்னை அணிக்காக அவர் 118 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஒரே வீரரான பிராவோவுக்கு விசில் போடு என அவரை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது

    https://twitter.com/ChennaiIPL/status/1298630091430342657?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

    இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை அணிக்கும் முதல் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பிராவோவும் பங்கேற்க உள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CSK, Dwayne Bravo

    அடுத்த செய்தி