கங்குலி பரித்துரைத்த வீரரை 'இந்திய ப்ளூ' அணிக்கு கேப்டனாக நியமித்த பி.சி.சி.ஐ!

இந்தியா க்ரீன் அணிக்கு கேப்டனாக பைஸ் பாசல் மற்றும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பிரியங்க் பாஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Vijay R | news18-tamil
Updated: August 7, 2019, 9:10 PM IST
கங்குலி பரித்துரைத்த வீரரை 'இந்திய ப்ளூ' அணிக்கு கேப்டனாக நியமித்த பி.சி.சி.ஐ!
சுப்மன் கில்
Vijay R | news18-tamil
Updated: August 7, 2019, 9:10 PM IST
துலிப் கோப்பைக்கான பிசிசிஐ வெளியிட்டுள்ள மூன்று அணியில் இந்திய ப்ளூ அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் சுப்மன் கில் தேர்வாகதது அதிர்ச்சி அளிப்பதாக சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சுப்மன் கில்லை தேர்வு செய்யாத தேர்வு குழுவையும் அவர் மிகவும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் பெங்களூரில் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ள துலிப் கோப்பை இந்திய ப்ளூ அணிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தியா க்ரீன் அணிக்கு கேப்டனாக பைஸ் பாசல் மற்றும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பிரியங்க் பாஞ்சல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கான இந்த தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள 44 வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு வீரரும் தேர்வாகவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் தமிழக அணி சிறப்பாக செயல்படவில்லை என்பது இதற்காக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Watch

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...