Home /News /sports /

துபாய் - மும்பை ஏர் இந்தியா விமான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது - இந்திய அணியை கேலி செய்த இலங்கை பத்திரிகையாளர்

துபாய் - மும்பை ஏர் இந்தியா விமான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது - இந்திய அணியை கேலி செய்த இலங்கை பத்திரிகையாளர்

“பாகிஸ்தானும், இலங்கையும் இரண்டு அபாரமான சேசிங்கில் இந்திய அணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்” என்று இலங்கைப் பத்திரிகையாளர் இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    ஆசிய கோப்பை தொதடரில் இந்திய அணியை இலங்கை அரிதாக வென்றது, அதனால் இது பல அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக் கோப்பையை வெல்லும் அணி இந்திய அணிதான் என்றும் இந்திய வீரர்களைப் பற்றி ஓவர் பில்ட்-அப்களும் ஆசியக் கோப்பையின் வர்ணஜாலங்களாக தொடருக்கு முன்பாக மின்ன, இப்போது களையிழந்து வண்ணமிழந்த அணியாக போயுள்ளது.

    இதனையடுத்து,இலங்கை பத்திரிகையாளர் ஒருவர் இந்திய அணியை கடுமையாகக் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார், சர்ச்சைக்குரிய முறையில் அவர் இந்திய அணியை மட்டம்தட்டி ட்வீட் போட்டு வருகிறார். இந்த பத்திரிகையாளர் பெயர் டேனியல் அலெக்சாண்டர்.

    அவர் தன் ட்வீட்களில், “ஏர் இந்தியா துபாய்-மும்பை விமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன” என்றும் “குறைத்து மதிப்பிடப்பட்ட இலங்கை தகுதியை மீறி மதிப்பீடு செய்யப்பட்ட இந்திய அணியை ஊதியது” “பாகிஸ்தானும், இலங்கையும் இரண்டு அபாரமான சேசிங்கில் இந்திய அணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்”

    Read more: ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்

    “இலங்கை வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது, ஆனால் இந்தியாவையும் ஐசிசி அலுவலகத்தில் உள்ளோரும் தவிர”என்று தாறுமாறாக ட்வீட் செய்து இந்திய அணியக் கேலி செய்துள்ளார்:



    பொதுவாக முன்பெல்லாம் இப்படி கேலி செய்யமாட்டார்கள், இன்று கேலி, கிண்டல் வருகிறது என்றால் அதன் காரணம், பிசிசிஐ நிதியளவில் ஒரு வலுவான அமைப்பாகி மற்ற வாரியங்களையும், ஐசிசியையுமே கட்டுப்படுத்தி வருகிறது, இந்திய வீரர்கள் கிரிக்கெட் வீரர்களில் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள் போன்ற எண்ணப்போக்கினால்தான் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக அனுபவமற்ற பவுலிங்கை வைத்துக் கொண்டு ஓரளவுக்கு நல்ல ஃபைட் கொடுத்தனர். வீரர்களின் உண்மையான பலத்தை விட பில்ட்-அப் அதிகமாக இருந்ததாலும் அந்த பில்ட்-அப்களை உண்மையென நம்பிய அப்பாவி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தான் இந்தத் தோல்வி பெரிய ஷாக், ஏனையோருக்கு இந்திய அணி தோல்வியுறும் என்ற சாத்தியப்பாடு தெரிந்ததுதான்.
    Published by:Elakiya J
    First published:

    Tags: Air India, Asia cup, Cricket, Mumbai

    அடுத்த செய்தி