Home /News /sports /

IND vs SA| தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு- 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வேகப்புயல்

IND vs SA| தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு- 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வேகப்புயல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 21 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 21 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வலது கை வேகப்புயல் டுவேன் ஆலிவியர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பியுள்ளார்.

    இந்த அணியில் 2 புதுமுகங்கள் உள்ளன. சிசந்தா மகலா என்ற ஸ்விங் பவுலர் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மென் ரியான் ரிக்கிள்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல் ஆஃப் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் பிரனிலன் சுப்ரேயன் அணிக்குள் வந்துள்ளார். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் கிளெண்டன் ஸ்டர்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    கடைசியாக தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியது, அந்த அணி பெரும்பாலும் அப்படியே உள்ளது. டீன் எல்கர் கேப்டன், தெம்பா பவுமா துணை கேப்டன். பவுலிங்கில் அச்சுறுத்தும் கேகிசோ ரபாடா, ஆன்ரிச் நார்ட்யே, லுங்கி இங்கிடி, இரண்டு இடது கை பவுலர்கள் மார்க்கோ ஜேன்சன், பியூரன் ஹென்றிக்ஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆனால் கவனிக்கப்பட வேண்டிய டுவேன் ஆலிவியர் 10 டெஸ்ட்களில் ஆடி 48 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார், பெஸ்ட் பவுலிங் 37 ரன்களுக்கு 6 விக்கெட். ஒரு மேட்சில் 11 விக்கெட்டுகளை அதிகபட்சம் கைப்பற்றியுள்ளார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அதிவேக பவுலிங் பிட்ச்தான் போடப்படும் என்பது உறுதியாகியுள்ளது. ஸ்விங் பவுலிங் ஆல்ரவுண்டர் வியான் முல்டரும் அணியில் உள்ளார். பேட்டிங்கில் எல்கர், மார்க்ரம், ராசி வான் டெர் டியூசன், பவுமா, கைல் வெரீனி.

    தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:

    டீன் எல்கர், பவுமா, குவிண்டன் டி காக், கேகிசோ ரபாடா, ரசீ வான் டெர் டியூசன், பியூரன் ஹென்றிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், ஆன்ரிச் நார்ட்யே, கீகன் பீட்டர்சன், சாரெல் எர்வீ, கைல் வெரீனி, மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், மார்க்ரம், லுங்கி இங்கிடி, டுவேன் ஆலிவியர், கிளெண்டன் ஸ்டர்மேன், பிரணலன் சுப்ரேயன் , சிசந்தா மகலா, ரியான் ரிக்கிள்டன்.

    முதல் டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa 2019

    அடுத்த செய்தி