• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உலக கோப்பையையே தவறவிட்டதை போல உணர்ந்தேன் - டிம் சவுத்தியை கலங்க வைத்த இந்திய வீரர்!

உலக கோப்பையையே தவறவிட்டதை போல உணர்ந்தேன் - டிம் சவுத்தியை கலங்க வைத்த இந்திய வீரர்!

டிம் சவுத்தி

டிம் சவுத்தி

ரேடியோ நிகழ்ச்சியில் பேசுகையில் ரிஷப் பந்தின் கேட்ச்சை வீணடித்து அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை கொடுத்த போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைவிட்டதாக நினைத்தீர்களா என டிம் சவுத்தியிடம் கேட்டனர்.

  • Share this:
உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது, இந்திய வீரரின் கேட்சை தவறவிட்டபோது உலக கோப்பையையே தவறவிடுவதைப் போல உணர்ந்ததாக கூறியுள்ளார் நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி.

முதல் முறையாக நடத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஜூன் மாதம் (18-23) நடைபெற்று முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியானது இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அனுபவம் குறித்து நியூசிலாந்தின் வேகப்புயல் டிம் சவுத்தி, ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார், அதில் இந்திய வீரர் ரிஷப் பந்தின் கேட்சை தவறவிட்ட போது உலக கோப்பையையே தவறவிட்டது போல உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

Also Read:   வரதட்சணை கொடுமை:  நண்பர்களால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கொடூர கணவர்!

இந்தியாவுடனான இறுதிப் போட்டியின் போது ரிசர்வ் நாளின் முதல் செஷனில், இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், 5 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கைல் ஜேமிசன் பந்து வீச்சில் கொடுத்த மிக எளிய கேட்ச்சை, இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற டிம் சவுத்தி கோட்டை விட்டார். இந்தியா அப்போது 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. மிடில் ஆர்டரில் ரகானேவும், ரிஷப் பந்த்-ம் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடக் கூடிய திறன் படைத்த ரிஷ்ப் பந்தின் கேட்ச்சை வீணடித்தது நியூசிலாந்தின் கோப்பை கனவுக்கே பாதகமாக மாறியிருக்கக்கூடும்.

ரேடியோ நிகழ்ச்சியில் பேசுகையில் ரிஷப் பந்தின் கேட்ச்சை வீணடித்து அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை கொடுத்த போது பட்டத்தை கைவிட்டதாக நினைத்தீர்களா என டிம் சவுத்தியிடம் கேட்டதற்கு, “பந்த் விளையாடும் விதத்தை பார்த்த பின்னர், ரிஷப் பந்தின் கேட்சை தவறவிட்ட பிறகு நான் அமைதியாக இருந்ததாக கூறினால் அது பொய் கூறுவதாகும்.

Also Read:  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? - கனே வில்லியம்சனின் சுவாரஸ்ய பதில்

அவரின் கேட்ச்சை கோட்டைவிட்ட பின்னர் என் மூளைக்குள் சாத்தான்கள் உலாவிக்கொண்டிருந்தன. ஆனால் அடுத்த ஓவரில் பந்துவீச வந்தபோது நான் விரைவாகவே அதில் இருந்து மீண்டாக வேண்டியதிருந்தது.

5, 6 ஓவர்களில் அவர் (பந்த்) மேட்சை நம் பக்கம் இருந்து திசை திருப்பிவிடக்கூடியவர். ஆனால் அவர் அவுட் ஆன பிறகு தான் நிம்மதியடைந்தேன். ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் டாப் எட்ஜ் ஆகி 41 ரன்களுக்கு ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.

டிம் சவுத்தி


அது ஒரு பயங்கரமான உணர்வு. நீங்கள் ஒரு கேட்சை தவறவிடும்போது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிக மோசமான உணர்வு, நீங்கள் உங்கள் சக வீரர்களை கைவிடுவது போல உணர்வீர்கள் என்றார் டிம் சவுத்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2019-ல் உலக சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கும் போது நீங்கள் சாம்பியன் ஆவீர்கள் என நினைத்தீர்களா என கேட்டதற்கு, நிச்சயமாக இல்லை, அப்போது தான் இலங்கை அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவினோம். அதன் பிறகு நல்ல கிரிக்கெட் விளையாடுனோம். கொஞ்சம் அதிர்ஷ்டமும் எங்களுக்கு இருந்தது என்றார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: