Home /News /sports /

அவர் கிட்ட நிச்சயமா பேசுவோம், என்ன ஷாட் அது?- ரிஷப் பண்ட் மீது திராவிட் கோபம்

அவர் கிட்ட நிச்சயமா பேசுவோம், என்ன ஷாட் அது?- ரிஷப் பண்ட் மீது திராவிட் கோபம்

ஹெட் கோச் ராகுல் திராவிட்

ஹெட் கோச் ராகுல் திராவிட்

ரிஷப் பண்ட் ஷாட் தேர்வு மற்றும் அவுட் ஆகும் விதம் குறித்து அவரிடம் நிச்சயம் அணி நிர்வாகம் பேசி முடிவெடுக்கும் என்று இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் ஷாட் தேர்வு மற்றும் அவுட் ஆகும் விதம் குறித்து அவரிடம் நிச்சயம் அணி நிர்வாகம் பேசி முடிவெடுக்கும் என்று இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தொடரில் இருமுறை ரிஷப் பண்ட், தென் ஆப்பிரிக்கா வேகப்புயல் ரபாடாவை இறங்கி வந்து ஆடி அசிங்கமாக அவுட் ஆனார். சின்னப்பையன் விவரம் பத்தாது என்று தன்னை வெளிப்படுத்தினார். அவரது மோசமான ஷாட் தேர்வினால் இந்திய அணி கூடுதலாக ரன் சேர்த்து லீடை 280-300க்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இன்னும்சொல்லப்போனால் அவரை தட்டிப் போட்டு எடுக்கின்றனர்.

    இந்நிலையில் இந்தக் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் திராவிட், “ரிஷப் பண்ட் பாசிட்டிவ் ஆக ஆடக்கூடியவர் அப்படி ஆடுவது அவருக்கு ஓரளவுக்கு சக்சசைக் கொடுக்கிறது என்பது தெரியும். ஆனால் அவரிடம் இது பற்றிய பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. அவருடன் என்றாவது இதைப்பற்றி பேசித்தான் ஆகவேண்டும். வேறு ஒன்றும் பெரிதாக இல்லை, எந்த சமயத்தில் அது போன்ற ஷாட்களை ஆட வேண்டும் என்பதை அவருக்குப் புரிய வைத்தால் போதும்.

    அவரிடம் யாரும் ஒரு போதும் ஆக்ரோஷமாக ஆட வேண்டாம் என்று கூறப்போவதில்லை. ஆனால் சில வேளைகளில் எந்த சமயத்தில் அந்த ஷாட்டை ஆட வேண்டும் என்பதை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. வந்தவுடனேயே அப்படி ஆட வேண்டாம் என்பதுதான் கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டு ஆடலாம். கடைசியில் ரிஷப் பண்ட் பாசிட்டிவ் பிளேயர் என்பதை மாற்றப்போவதில்லை.

    அவர் போன்றவர்கள் ஆட்டத்தின் போக்கை விரைவில் மாற்றக்கூடியவர்கள். எனவே அவரிடமிருந்து அந்தத் தன்மையை பறிக்க விரும்பவில்லை. அவரி வித்தியாசமாக ஆடச்சொல்லப்போவதில்லை. சில சயமங்களில் அந்த மாதிரி ஆக்ரோஷ ஷாட்டை ஆடும் நேரம், சமயம் பற்றி அவரிடம் பேசுவோம். டெஸ்ட் போட்டியின் கடினமான காலக்கட்டத்தை கொஞ்சம் சமாளித்து கடந்து செட்டில் ஆகிவிட்டு அடிக்கலாம். அவர் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார், தொடர்ந்து கற்றுக் கொள்வார். ” இவ்வாறு கூறியுள்ளார் ராகுல்திராவிட்.

    Also Read: ரபாடா என்ன டெல்லி கேப்பிடல்ஸ் நெட் பவுலரா? ரிஷப் பண்ட் ஒரு ‘ஹைப்’, ‘சின்னப்பையன்’என்று நிரூபித்த ரபாடா

    ரிஷப் பண்ட்டிற்கு தன் டெக்னிக் மீது நம்பிக்கையில்லை, உடலுக்கு குறுக்கே ஓவர் த ஸ்டம்பிலிருந்து பந்தை வீசினால் எட்ஜ் செய்து விடுகிறார், எனவே அந்த பந்தை பவுலர் வீசுவதற்கு முன் ரெண்டு வீசு வீசலாம் என்று முடிவுக்கு வருகிறார், அதற்கு கால நேரம், பவுலர் எல்லாம் இல்லையா என்பதே கேள்வி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி