Home /News /sports /

ராகுல் தேவையில்லை, கோலியை ஓப்பனிங் இறக்குங்க - ரோஹன் கவாஸ்கர் ஆலோசனை

ராகுல் தேவையில்லை, கோலியை ஓப்பனிங் இறக்குங்க - ரோஹன் கவாஸ்கர் ஆலோசனை

விராட் கோலி

விராட் கோலி

டி20 உலகக்கோப்பையிலும் கோலியை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்கிறார் ரோஹன் கவாஸ்கர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    ஆப்கானுக்கு எதிராக ரோஹித் சர்மா உட்கார்ந்து கொண்ட நிலையில் தொடக்க வீரராகக் களமிறங்கிய விராட் கோலி சதம் விளாசி தன் நீண்ட நாளைய காத்திருப்பை முடித்து வைத்தார். இதன் மூலம் 71வது சதத்தை எடுத்தார் கோலி. ஆகவே டி20 உலகக்கோப்பையிலும் கோலியை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்கிறார் ரோஹன் கவாஸ்கர்.

    மேலும் 3வது வீரராக சூரியகுமார் யாதவ் இறங்க வேண்டும் என்றும் ரோஹன் கவாஸ்கர் வலியுறுத்துகிறார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    Read More: மறைந்த ஷேன் வார்னே ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிறந்த நாள் டிவீட் செய்தது யார்? இணையத்தில் வைரலாகும் பதிவு!!

    இந்நிலையில் ரோஹன் கவாஸ்கர் கூறியதாவது, “விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நான் கருதுகிறேன். அவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் போன்றவை அதனை தெளிவாக விவரிக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க அவரே விரும்புவதாக சொல்லியதாக எனக்கு நியாபகம் உள்ளது.

    அது இந்திய அணிக்கும் உதவும். அதேபோல மூன்றாவது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்க வேண்டும். இது நடக்க வேண்டுமெனில் ராகுல் அதற்கு தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. கோலி யாருக்கு எதிராக சதம் அடித்தார் என்பது முக்கியமல்ல. அது ஒரு  சர்வதேச சதம் என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். மீண்டும் அவர் ரன் இயந்திரமாக தன் பழைய ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளது அணிக்கு சாதகமாக இருக்கும்" இவ்வாறு கூறியுள்ளார் ரோஹன் கவாஸ்கர்.

     

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Asia cup, Rahul Dravid, Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி