ஆப்கானிஸ்தான் அழிந்து விடக்கூடாது எங்களுக்கு வேண்டியது அமைதியும் சமாதானமும், உலகத் தலைவர்களே ஆப்கானிஸ்தானை பெரும்குழப்பத்தில் விட்டு விடாதீர்கள், அழிவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “உலகத் தலைவர்களே! என் நாடு பெரும்குழப்பத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பெண்களும் உயிர்த்தியாகம் செய்கின்றனர். வீடுகளும் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
எங்களை குழப்ப நிலையில் விட்டு விடாதீர்கள். ஆப்கானியர்களை கொல்வதை நிறுத்துங்கள், ஆப்கான் அழிவை தடுத்து நிறுத்துங்கள்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
செப்டம்பர் 11 அமெரிக்கா இரட்டைக் கோபுர பயங்கரவாதத்தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் பின் லேடனை தேடியும், அல் கய்தாவை அழிக்கவும் ஆப்கான் மீது படையெடுத்தது.
அன்று தூக்கி எறியப்பட்ட தலிபான்கள் இப்போது அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டதும் மீண்டெழுந்து ராணுவ வெற்றிக்காக போராடி வருகின்றனர், இவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளாதவர்கள்.
Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
We want peace.🙏
— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021
தலிபான்கள் நகரங்களைக் கைப்பற்றி வருகின்றன, தலிபான்கள் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கான் ராணுவத்தினரே ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தச் சண்டை தொடங்கியதிலிருந்து குடும்பத்தினர் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர், தலிபான்களிடம் சிக்கும் மக்கள் சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர்.
இந்திய ஆப்கானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப உத்தரவிட்டது. தலிபான்கள் பிடித்த இடத்திலிருக்கும் இந்தியர்களையும் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பல நகரங்களை ஊர்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Rashid Khan