"போகாதீர்கள் தோனி" ட்விட்டரில் மனமுருகும் ரசிகர்கள்!

சாதாரண குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சி-தன்னம்பிக்கை எனும் மந்திரத்தை தன் ஆட்டத்தால் போதித்தவர் தோனி.

Web Desk | news18
Updated: July 12, 2019, 8:43 AM IST
மகேந்திர சிங் தோனி
Web Desk | news18
Updated: July 12, 2019, 8:43 AM IST
"Dont go Dhoni" என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருவதைப் பார்த்தால் உலகக்கோப்பையில் இந்தியா வெளியேறிய சோகத்தைவிட தல தோனி அவுட்டான விதமும், அவர் ஓய்வு பெறப்போகிறார் என்கிற விஷயமும் ரசிகர்களை பெரிதும் பாதித்திருப்பதை உணர முடிகிறது. முதுபெரும் பாடகி லதா மங்கேஷ்கர் முதல் முட்டுச்சந்தில் இருக்கும் வாண்டுகள் வரை போகாதீர்கள் தோனி என்பதையே கோரிக்கையாக வைக்கின்றனர்.

1996-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இந்தியா இருந்தபோது ரசிகர்களின் ரகளையால் போட்டி தடைபட்டு மைதானத்தில் இருந்து வினோத் காம்ப்ளி கதறியபடி வெளியேறிய காட்சி மனதை விட்டு அகலாதது.

அத்தகைய வலியை 2019 அரையிறுதியில் கிடைத்திருக்ககூடிய இத்தோல்வி ஏற்படுத்தியுள்ளது. மலையே இடிந்து விழுந்தாலும் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தோனி, ரன் அவுட்டாகியதும் இதுநாள் வரை ஆடுகளத்தில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை அழுகையாக வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை நிலைகுலைய செய்தது.

தோனி


இந்திய ரசிகர்களை போலவே தோனி வெற்றிக்கனியை பறித்து விடுவார் என அம்பயரும் நம்பியிருந்ததை தோனி அவுட்டானபோது அம்பயர் காட்டியே ரியாக்ஷனே விளக்கியது,சச்சினுக்கு பின் இந்திய ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த தோனி. அவர் ஓய்வு பெறப்போகிறார் என்ற சேதி பரவியுள்ள நிலையில் இந்தியா அரையிறுதியில் வெளியேறியதால் அது உண்மையாகிவிடுமோ என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது.

அதனால் Dont go Dhoni என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் தொடங்கி டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். சூர்யா ராகுல் என்ற ரசிகர், என் இதயம் கோடி துண்டுகளாய் உடைந்தது போலிருக்கிறது. போகாதே தோனி என உருக்கமாகக் கூறியுள்ளார்.இந்த வரிசையில் முதன்மையானவர் கானக்குயில் லதா மங்கேஷ்கர். ஓய்வுபெறும் முடிவை கைவிடவேண்டும் என உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார். ஓய்வு முடிவு பற்றிய விஷயம் வருத்தம் தருவதாகவும், அது குறித்து நினைத்துக் கூட பார்க்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருப்பதுடன், "நேற்று நாம் வெல்லாமல் போயிருக்கலாம் ஆனால் தோற்றுவிடவில்லை" என்ற பாடலையும் சமர்ப்பித்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர்- தோனி


அருண் குமார் என்ற தமிழ் ரசிகரோ...."தல போகாதீங்க தல"...என மன்றாடுகிறார். இவ்வாறாக டுவிட்டர் முழுவதும் தோனியே நிரம்பியிருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து விடாமுயற்சி-தன்னம்பிக்கை எனும் மந்திரத்தை தன் ஆட்டத்தால் போதித்தவர் தோனி.. இளம் இந்திய அணி அவரிடம் கற்கவேண்டிய பாடம் கொஞ்சம் எஞ்சியுள்ளது. ஆம்....போகாதீர்கள் தோனி......!First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...