ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘உலகக்கோப்பை வருகிறது… ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள்…’ – விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு கவுதம் காம்பீர் அட்வைஸ்…

‘உலகக்கோப்பை வருகிறது… ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள்…’ – விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு கவுதம் காம்பீர் அட்வைஸ்…

ரோகித் சர்மா - விராட் கோலி

ரோகித் சர்மா - விராட் கோலி

2011-ல் நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின்னர் நடந்த 2 தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை வரவுள்ளதால் ஓய்வு நாட்களை எதிர்பார்க்காதீர்கள், என்று விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அட்வைஸ் செய்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதையொட்டி தொடர்ச்சியான ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. வங்கதேச சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான தொடரை உள்ளூரில் விளையாடவுள்ளது. இதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது அடுத்து வரும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் வீரர்களாக கருதப்படுகின்றனர். இந்நிலையில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து கோலி, ரோகித்துக்கு சில ஆலோசனைகளை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் வழங்கியுள்ளார்.

காம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- உலகக்கோப்பை அணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக அணியில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். அந்த வகையில் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறும் வீரர்கள் என உறுதி செய்யப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் விராட்கோலி, ரோகித் சர்மா போன்றோர் ஓய்வு நாட்களை எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ச்சியாக அவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் ஓய்வு எடுத்தீர்கள் என்றால், மீண்டும் களத்திற்கு வரும்போது உலகக்கோப்பை நெருங்கி விடும். இது மன ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடைசி நேரத்தில் நம்மால் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக முடியாது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பாண்ட்யா சகோதரர்கள் சந்திப்பு…

கடந்த 2 உலகக்கோப்பை தொடரில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டன. 20 ஓவர் அல்லது ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பை தொடர் ஆகியவை வரும்போது ஓய்வை எதிர்பார்க்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரிஷப் பந்த் உயிரைக் காக்க உதவிய பஸ் டிரைவர், நடத்துனருக்கு அரசு பாராட்டு….

2011-ல் நடந்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்  தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின்னர் நடந்த 2 தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Rohit sharma, Virat Kohli