உலகக்கோப்பை போட்டிகளுக்கான வெள்ளோட்டமாகக் கருத வேண்டாம்: மோர்கனுக்கு ரோகித் சர்மா எச்சரிக்கை

உலகக்கோப்பை போட்டிகளுக்கான வெள்ளோட்டமாகக் கருத வேண்டாம்: மோர்கனுக்கு ரோகித் சர்மா எச்சரிக்கை

ரோஹித் சர்மா

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சில வாரங்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அணி நிர்வாகம் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்ய அவர் தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்.

  • Share this:
நாளை அகமதாபாத்தில் முதல் டி20 போட்டி நடைபெறும் நிலையில் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை உலகக்கோப்பை டி20 தொடருக்கான வெள்ளோட்டமாகப் பார்க்க வேண்டாம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில், உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறோம். எங்களிடம் வலுவான அணி உள்ளது, பொதுவாக இப்படி அமையாது. அதனால் எந்த திட்டத்தையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் எந்தத் திட்டத்துடனும் களமிறங்கும் நம்பிக்கையும் பிறந்துள்ளது, என்றார்.

ரோகித் சர்மா அப்படிப் பார்க்கக் கூடாது, இந்தத் தொடரை ஒரு தனித்த தொடராகப் பார்க்க வேண்டுமென்று மோர்கனுக்குப் பதில் அளிப்பது போல் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்த 20 ஓவர் தொடரை, இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஒத்திகையாக நாங்கள் பார்க்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்வதில் தான் எங்களது கவனம் உள்ளதே தவிர, நீண்ட காலத்திற்கு பிறகு நடக்க உள்ள உலக போட்டி குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை.

தற்போதைய போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி நன்றாக ஆடினால், எதிர்கால போட்டிகள் தானாகவே நல்லபடியாக அமையும். இது பெரிய தொடர். இதில் ஒரு அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். என்னுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் அல்லது ஷிகர் தவான் ஆகியோரில் யார் இறங்குவார் என்று கேட்கிறீர்கள். ஆடும் லெவன் அணி குறித்து நான் எதுவும் சொல்ல இயலாது. யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிய வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சில வாரங்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அணி நிர்வாகம் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதை செய்ய அவர் தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் ரோகித் சர்மா.  நாளை (வெள்ளி) இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
Published by:Muthukumar
First published: