• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அதீத ஆக்ரோஷம் தேவையில்லை: கோலிக்கு லெஜண்ட் கபில் தேவ் அறிவுரை

அதீத ஆக்ரோஷம் தேவையில்லை: கோலிக்கு லெஜண்ட் கபில் தேவ் அறிவுரை

கபில்தேவ்

கபில்தேவ்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி நிச்சயம் பிரகாசிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்த கபில் தேவ், அவர் அதீத ஆக்ரோஷம் காட்ட வேண்டிய தேவையில்லை என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

  • Share this:
    2014-ல் இங்கிலாந்தில் தடவு தடவென்று தடவி ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையான விராட் கோலி அவரிடம் அடிக்கடி ஆட்டமிழந்தார், ஆனால் 2018-ல் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் ஒருமுறை கூட ஆட்டமிழக்காமல் தொடரிலும் 593 ரன்களை அடித்தார். ஓரளவில் ஆண்டர்சனுக்கும் தனக்கும் இருந்த கிரிக்கெட் பகைமையில் கோலி வென்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.

    இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியுடன் சேர்ந்து இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடுகிறது, இது மிகவும் டெஸ்ட்டிங் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோலி இந்தத் தொடரிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்த கபில் தேவ், அவரது சத வறட்சி இந்தத் தொடரில் நீங்கும் என்கிறார்.

    மிட்-டே பத்திரிகைக்கு கபில் கூறியதாவது:

    அவர் பிரகாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவரை அசைக்க முடியுமா? சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதில் அவர் சமர்த்தர், ஆனால் அவர் அதீத ஆக்ரோஷமாக செயல் படக்கூடாது என்று எச்சரிக்கிறேன். ஒவ்வொரு செஷனாக அவர் அளவிட வேண்டும்.

    தன் ஆதிக்கத் தருணத்துக்காக அவர் காத்திருந்தால் நல்லது. கொஞ்சம் பொறுமையுடன் ஆடினால் நிச்சயம் அவர் ரன்களை எடுப்பார். எடுத்த எடுப்பிலேயே ஆதிக்கம் செலுத்துவது இங்கிலாந்தில் முடியாது. ஏனெனில் இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும் அதை அவர் பொறுமையுடன் அவதானிக்க வேண்டும். ஸ்விங், பவுலிங்கை பார்த்து பொறுமையாக ஆடினால் இங்கிலாந்தில் சாதிக்க முடியும்.

    இங்கிலாந்து அணி அவர்கள் நாட்டில் கடினமான அணி என்பதை இந்தியாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இந்திய பவுலர்கள் அங்குள்ள பிட்ச்களில் எப்படி வீசுகிறார்கள் என்பதைப் பொறுத்து முடிவுகள் மாறும். ஸ்விங் நல்ல பலனளிக்கும் இந்த விதத்தில் இங்கிலாந்து இந்தியாவை விட ஒரு படிமேலே உள்ளனர்.

    இவ்வாறு கூறினார் கபில் தேவ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: