Home /News /sports /

உன் பேட்டிங்கைப் பார்க்க விரும்புகிறேன், புத்திசாலித் தனமாக ஆடு: சேவாகிடம் கூறிய மறைந்த நடுவர் ரூடி கர்ட்சன்

உன் பேட்டிங்கைப் பார்க்க விரும்புகிறேன், புத்திசாலித் தனமாக ஆடு: சேவாகிடம் கூறிய மறைந்த நடுவர் ரூடி கர்ட்சன்

சேவாக், ரூடி கர்ட்சன்

சேவாக், ரூடி கர்ட்சன்

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் 73 வயது ரூடி கர்ட்சன் கார் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் அதிரடி இந்திய தொடக்க முன்னாள் வீரர் சேவாக் தன் இரங்கலைத் தெரிவித்ததோடு, அவர் குறித்த தன் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் 73 வயது ரூடி கர்ட்சன் கார் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் அதிரடி இந்திய தொடக்க முன்னாள் வீரர் சேவாக் தன் இரங்கலைத் தெரிவித்ததோடு, அவர் குறித்த தன் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    1992-ம் ஆண்டு, முதல் முறையாக நடுவராக பணியாற்றிய அவர் மொத்தம் 331 சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.உலகம் முழுதும் ஆகச்சிறந்த நடுவர் என்ற பெயர் எடுத்தவர். அதிகம் சர்ச்சைகளில் சிக்காதவர். நல்ல மனிதர், வீரர்களுடன் சகஜமாக நட்பு ரீதியாகப் பழகுபவர்.

    கேப்டவுனில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூடி கோயர்ட்சென், நண்பர்களுடன் ஜாலியாக கோல்ப் விளையாட சென்று விட்டு நேற்று காலை காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற மேலும் 3 பேர் இந்த விபத்தில் பலியானார்கள்.

    கிரிக்கெட் உலகம் இவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. சேவாகின் விசிறியான ரூட் கர்ட்சன் ஒருமுறை கண்டபடி ஷாட்கள் ஆடி அவுட் ஆகாதே, உன் ஆட்டத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியதை சேவாக் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    சேவாக் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் ரூடி கர்ட்சன் படத்தையும் வெளியிட்டு கூறியிருப்பதாவது:

    ரூடி கர்ட்சனுடன் எனக்கு நல்ல உறவு உண்டு. களத்தில் நான் அவசரம் அவசரமாக ஆக்ரோஷ ஷாட்டுகள் அடிக்கும் போதெல்லாம் சத்தம் போடுவார். புத்திசாலித்தனமாக விளையாடு. உனது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறேன் என்று சொல்வார். ஒரு முறை தனது மகனுக்கு தரமான ஒரு கால்காப்பு வாங்க வேண்டும் என்று கூறி அது பற்றி விசாரித்தார்.

    Also Read: ஐசிசி உயர்மட்ட கிரிக்கெட் நடுவர் ரூடி கர்ட்சன் கார் விபத்தில் மரணம்

    அவருக்கு அதை பரிசாக அளித்தேன். பழகுவதற்கு இனிமையான அற்புதமான மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி' என்று கூறியுள்ளார். இதே போல் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ்சிங், காலிஸ், சங்கக்கரா, வாசிம் அக்ரம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Umpire, Virender sehwag

    அடுத்த செய்தி