Home /News /sports /

அனைத்தையும் சாதித்து விட்டோம் என்று நினைக்கிறாரா விராட் கோலி?- ஷாகித் அப்ரீடி கேள்வி

அனைத்தையும் சாதித்து விட்டோம் என்று நினைக்கிறாரா விராட் கோலி?- ஷாகித் அப்ரீடி கேள்வி

ஷாகித் அஃப்ரீடி, விராட் கோலி.

ஷாகித் அஃப்ரீடி, விராட் கோலி.

கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டோம், இனி கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்குதான் என்று நினைக்கிறாரா விராட் கோலி என்று கோலியின் கிரிக்கெட் மீதான பிடிப்பையே கேள்விக்குட்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி.

    கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டோம், இனி கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்குதான் என்று நினைக்கிறாரா விராட் கோலி என்று கோலியின் கிரிக்கெட் மீதான பிடிப்பையே கேள்விக்குட்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி.

    விராட் கோலியின் கிரிக்கெட் ஆட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பை ஆன கதையாகி விட்டது, சதம் வறண்டது, இப்போது அரைசதமும் வறண்டு போய்விட்டது. மாறாக முதல் பந்தில் டக் அடிப்பது வாடிக்கையாகி வருகிறது. ஒருகட்டத்தில் 3 வடிவங்களிலும் 50க்கும் மேல் சராசரி வைத்து ஸ்டார் பிளேயராக நம்பர் 1 ஆக இருந்தார், இன்று பரிதாபம்.

    இந்நிலையில் சமா டிவிக்கு ஷாகித் அப்ஃரீடி கூறும்போது, “கிரிக்கெட்டில் மனப்பான்மை என்ற ஒன்று உண்டு. நான் இதைப்பற்றிதான் அதிகம் பேசியிருக்கிறேன். கிரிக்கெட் அவர் மனதில் இருக்கிறதா இல்லையா? விராட் கோலி முன்பெல்லாம் உலகில் நம்பர் 1 பேட்டராக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. ஆனால் இன்னும் அவர் இதே உத்வேகம் மனப்பான்மையுடன் ஆடுகிறாரா?

    அல்லது தான் எல்லாம் சாதித்து விட்டேன், இனி சாதிக்க ஒன்றுமில்லை இனிமேல் பொழுதுபோக்குதான் என்று நினைக்கிறாரா? இவை எல்லாமே அவரது மனப்பான்மை அணுகுமுறை பற்றியது” என்றார் ஷாகித் அஃப்ரீடி.

    விராட் கோலி தனது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேர்காணலில், ’ரவி சாஸ்திரிக்குத்தான் தெரியும், நான் கடந்த 6-7 வருடங்களாக எத்தனை கடினமாக உழைக்கிறேன் என்று, எத்தனை வடிவங்களில் கிரிக்கெட் ஆடுகிறோம், ஏற்றத் தாழ்வுகள் இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், உடல் சோர்வுகள், 3வடிவங்களிலும் ஆடுவது, அதோடு ஐபிஎல் ஒரு 10-11 ஆண்டுகளாக ஆடுகிறோம். 7 ஆண்டுகள் கேப்டன்சி, இவையெல்லாம் ஒருவருக்கு இடைவேளை பற்றியும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது பற்றியும் எண்ண வைக்கிறது, அதிகம் பேர் இது பற்றி பேசுவதில்லை’ என்று பணிச்சுமை பற்றிக் கூறியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Shahid Afridi, Virat Kohli

    அடுத்த செய்தி