Home /News /sports /

கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என்கிறீர்களா? நிருபரை மடக்கிய சூரியகுமார் யாதவ்

கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என்கிறீர்களா? நிருபரை மடக்கிய சூரியகுமார் யாதவ்

கே எல் ராகுல் - சூர்ய குமார் யாதவ்

கே எல் ராகுல் - சூர்ய குமார் யாதவ்

ரோஹித் சர்மாவுடன் நீங்கள் தொடக்கத்தில் இறங்கலாமே என்று கேட்ட செய்தியாளரிடம் ‘அப்படியென்றால் ராகுலை நீக்க வேண்டும் என்கிறீர்களா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினார் சூரியகுமார் யாதவ்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Inter, IndiaUAEUAE
ரோஹித் சர்மாவுடன் நீங்கள் தொடக்கத்தில் இறங்கலாமே என்று கேட்ட செய்தியாளரிடம் ‘அப்படியென்றால் ராகுலை நீக்க வேண்டும் என்கிறீர்களா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினார் சூரியகுமார் யாதவ்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து இந்தியா ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்களில் 94 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவின் அதிரடியால் அடுத்த 7 ஓவர்களில் இந்திய அணி 98 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் விராட் கோலி அரைசதம் எடுத்தாலும் சூரியகுமாரின் இன்னிங்ஸ் கோலியின் இன்னிங்சை பின்னுக்குத் தள்ளியது.

நாகின் டான்ஸ் ஆடி வங்கதேசத்தை கிண்டல் செய்த இலங்கை வீரர் கருணரத்னே!

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது,  செய்தியாளர் ஒருவர், உலகக்கோப்பைக்கு முன்னர் சோதனை ஓட்டமாக ரோஹித் சர்மாவுடன் உங்களை தொடக்க வீரராக இறக்கலாமே, அப்படி என்றால் நீங்கள் களமிறங்குவீர்களா? என்றார், அதற்கு பதிலளித்த சூரியகுமார், “அப்படியென்றால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?” என மடக்கினார்.

மேலும் சூரியகுமார் கூறும்போது, “கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து திரும்பி வந்துள்ளார். அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. நான் முன்பே சொன்னதுபோல் அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் நான் பேட்டிங் செய்ய தயார். இதை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். நான் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என அவர்கள் கூறுவார்கள். நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம்.

அத்திட்டங்களை பயிற்சியின்போது நடைமுறைப்படுத்துவதை விட போட்டியில் நடைமுறைப்படுத்தினால் அது எங்களுக்கு இன்னும் நிறைய சிந்தனைகளைத் தரும்” என்றார்.
Published by:Raj Kumar
First published:

Tags: Asia cup, Indian cricket team, Kl rahul

அடுத்த செய்தி