Home /News /sports /

அச்சமற்ற கிரிக்கெட் ஆச்சா போச்சா என்ற கோலியே பயந்து பயந்து ஆடுகிறார்

அச்சமற்ற கிரிக்கெட் ஆச்சா போச்சா என்ற கோலியே பயந்து பயந்து ஆடுகிறார்

Virat kohli

Virat kohli

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் வெற்றிபெற இந்திய அணி அச்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் வெற்றிபெற இந்திய அணி அச்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    சமீபத்தில் முடிவடைந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியை தென்னாப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அவர்களின் மிடில் ஆர்டர் தோல்விக்கான விமர்சனங்களைச் சுமந்தாலும், டாப் ஆர்டரும் பழமைவாதமாக விளையாடியது, இது பேட்டர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியது.

    ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோவில் டீம் இந்தியாவின் தோல்விக்கான காரணங்களை அடுக்குகிறார், அதில் விராட் கோலி தான் கேப்டனாக இருந்த போது கடைப்பிடித்த அல்லது கடைப்பிடித்ததாகக் கூறிக்கொண்ட அச்சமற்ற கிரிக்கெட் ஆட்டம் என்பதை தானே மறந்து போய்விட்டாரே என்று கூறுகிறார் ஆகாஷ் சோப்ரா.

    அச்சமற்ற அணுகுமுறை தேவை என்று அணிக்கு ஒரு கொள்கை இருக்கிறது, அந்தக்கொள்கையை ஒவ்வொருவரும் உள்வாங்கிக் கொண்டுள்ளனர். இப்போது அந்தக் கொள்கை எங்கே போனது? அந்தக் கொள்கை கைவிடப்பட்டது. கே.எல்.ராகுலைப் பார்க்கும்போது அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடுவதைப் போலா இருக்கிறது? இப்போதெல்லாம் விராட் கோலி விளையாடுவதைப் பார்க்கும்போதும் அச்சமற்ற ஆட்டம் என்ற கொள்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.

    அணியில் தனது இடத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு வீரர் அச்சமற்ற அணுகுமுறையைக் கொள்ள வேண்டும். அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடுகிறாரா என்றால் இல்லை அணிக்கு ஒரு உள்நோக்கம் உள்ளது, அவர்கள் அதனுடன் செல்கிறார்கள் - நான் முக்கியமில்லை, என்னை விட அணிதான் முக்கியம் என்பதே அந்த நோக்கம்.

    அச்சமற்ற முறையில் அடித்து ஆடுவது என்பது நீங்கள் பொறுப்பற்றவராக மாறுவது என்று அர்த்தமல்ல. ரிஷப் பந்த் ஆடிய ஷாட் மிகவும் நன்றாக இருந்தது என்று நான் கூறவில்லை, ஏனென்றால் அது அந்த அணியின் கொள்கை அல்ல ஆனால் அது அவருடைய தனிப்பட்ட செயல்.

    நான் என்ன கூற வருகிறேன் என்றால், நம்பர் 1 முதல் நம்பர் 8 வரை அனைவரும் அடிப்பார்கள் என்பது அணியின் அணுகுமுறையாக இருந்திருந்தால், பண்ட் கொஞ்சம் சீக்கிரமே அடித்து ஆடத் தொடங்கி அவுட் ஆகிறார் என்றே நான் கூறுவேன். ஆனால் உங்கள் அணியின் கொள்கை அச்சமற்ற அணுகுமுறை அல்ல. ஒருவர் ஒரு திசையிலும், மீதமுள்ள அணி மற்றொரு திசையிலும் சென்றால், அது சரிவராது.

    இவ்வாறு கூறுகிறார் ஆகாஷ் சோப்ரா,
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Virat Kohli

    அடுத்த செய்தி