“பொதுவெளியில் அழ வேண்டாம்“ - ஷஃபாலி வெர்மாவை அறிவுறுத்திய முன்னாள் வீரரை கடுமையாக சாடிய ரசிகர்கள்

இந்திய மகளிர் அணி

 • Share this:
  கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியடைந்தால் பெண்கள் கண்ணீர்விட்டு அழவேண்டாமென்று இந்திய முன்னாள் வீரரின் கருத்தை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பாத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.

  இந்திய அணி வீராங்கனை ஷஃபாலி வெர்மா தோல்வியடைந்த சோகத்தில் மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா இந்த தொடரில் சிறப்பாக விளையாடி ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். ஆனால் இறுதிப்போட்டியில் 2 ரன்களில் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.

  ஷஃபாலி வெர்மா உட்பட இந்திய வீரங்கனைகள் கண்ணீர்விட்ட புகைப்படத்திற்கு இந்திய வீரர்கள் உட்பட பலர் ஆறுதல் தெரிவித்தனர். இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் பேடியின் கருத்து சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “இந்திய அணி இதற்காக வேதனைப்பட தேவையில்லை. நீங்கள் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி முன்னேறி சென்றீர்கள். ஆஸ்திரேலியாவில் பிரகாசமாக விளையாடி உள்ளீர்கள். என்னுடைய தனிப்பட்ட கோிக்கை என்னவென்றால் பெண்கள் பொதுவெளியில் அழுவதைத் தவிர்க்க வேண்டும். கண்ணீர் ஒருவரது தனி சொத்து“ என்றுள்ளார்.  பிஷன் பேடியின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தோல்வியடைந்தால் ஆண் என்ன? பெண் என்ன? யாராக இருந்தாலும் அழ தான் செய்வார்கள். ஆடவர் கிரிக்கெட் அணி தோல்வியால் பலமுறை அழுது உள்ளனர் என்று அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.  Also see:


   
  Published by:Vijay R
  First published: