பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணியை விட அதிக திறமை உள்ளது, ஆகவே ஒப்பிடாதீர்கள் - அப்துல் ரசாக் கூக்குரல்

அப்துல் ரசாக்

அந்தக் காலத்திலிருந்தே இது உண்டு கவாஸ்கர் - மஜீத் கான், கபில்தேவ்-இம்ரான் கான், சச்சின் டெண்டுல்கர்-இன்சமாம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக்- தோனி இப்போது விராட் கோலி - பாபர் ஆஸம், என்று இந்த ஒப்பீட்டு மனநோய் பாகிஸ்தானுக்கு இருந்து வருகிறது.

 • Share this:
  எந்தக் காலத்திலும் இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிடுவது வழக்கம்தான். ஆனால் பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் அணியிடம் அதிக திறமைகள் உள்ளன, இந்தியாவை ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணி கூடுதல் திறமை வாய்ந்தது ஆகவே எப்போதும் இந்தியாவுடன் நம்மை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

  அந்தக் காலத்திலிருந்தே இது உண்டு கவாஸ்கர் - மஜீத் கான், கபில்தேவ்-இம்ரான் கான், சச்சின் டெண்டுல்கர்-இன்சமாம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக்- தோனி இப்போது விராட் கோலி - பாபர் ஆஸம், என்று இந்த ஒப்பீட்டு மனநோய் பாகிஸ்தானுக்கு இருந்து வருகிறது.

  ஆனால் ஒரு கட்டத்தில் சேவாக், சச்சின், திராவிட், கங்குலி, கும்ப்ளே, ஹர்பஜன், லஷ்மண், தோனி, என்று வரிசையாகப் படையெடுக்க பாகிஸ்தானுக்கு ஒப்பிட்டு மாளவில்லை. அதுவும் 2004 தொடரில் இந்திய அணி சேவாகின் முச்சதத்துடன் போட்டு புரட்டி எடுக்க பாகிஸ்தானில் இந்திய பேட்ஸ்மென்கள் சூப்பர் ஸ்டார்களான கதையும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

  இந்நிலையில் அப்துல் ரசாக் கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு அளித்த பேட்டியில், “முதலில் நாம் விராட் கோலியையும் பாபர் ஆஸமையும் ஒப்பிடக்கூடாது. இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிடக்கூடாது காரணம், நம்மிடம் அவர்களைக் காட்டிலும் அதிக திறமைகள் இருக்கின்றன. நம் வரலாற்றை எடுத்துப் பாருங்கள், நம்மிடையே எவ்வளவு கிரேட் பிளேயர்கள் உருவாகியுள்ளனர். முகம்து யூசுப், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், ஜாவேத் மியாண்டட், ஜாகிர் அப்பாஸ், இஜாஜ் அகமெட் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  விராட் கோலியும் பாபர் ஆஸமும் முற்றிலும் வேறுபட்ட வீரர்கள், இவர்களை ஒப்பிட வேண்டுமெனில் பாகிஸ்தான், இந்தியா ஆடினால்தான் ஒப்பிட முடியும். விராட் கோலி நல்ல பேட்ஸ்மென், பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக ஆடியுள்ளார். எனக்கு அவருக்கு எதிராக ஒன்றுமில்லை.

  இந்தியர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்களை ஒப்பிடுவதில்லை. மாறாக நாம் ஏன் இப்படி ஒப்பிட வேண்டும், மேலும் நம்மிடம் அவர்களை விட நிறைய திறமைகள் உள்ளன.

  பாபர் ஆஸம் மிகுந்த திறமையுடைய பேட்ஸ்மென். உலக அளவில் நிரூபித்து விட்டார் இப்போது அவர் நம்பர் 1 பேட்ஸ்மென். அவரை நாம் ஒழுங்காக பார்த்துக் கொண்டால் பல சாதனைகளை முறியடித்து விடுவார்” என்றார் அப்துல் ரசாக்.

  கோலி 427 போட்டிகளில் மூன்று வடிவங்களிலும் 70 சதங்கள் 50க்கும் அதிகமான சராசரி வைத்திருப்பவர். 22,000 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார். பாபர் ஆஸம் இப்போதுதான் 17 சதங்கள் அடித்திருக்கிறார். செவெண்டீன் எங்கே செவண்டி எங்கே?
  Published by:Muthukumar
  First published: