• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலிக்காக இதை செய்தாக வேண்டும் - ரெய்னா கோரிக்கை

விராட் கோலிக்காக இதை செய்தாக வேண்டும் - ரெய்னா கோரிக்கை

virat kohli

virat kohli

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

  • Share this:
விராட் கோலிக்காக இதை செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடம் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார்.

ஐபிஎல் திருவிழா பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக இன்றைய தினம் உலகக் கோப்பை டி20 தொடர் துபாய் மற்றும் ஓமனில் தித்திப்பாக தொடங்கியிருக்கிறது. இன்று முதல் குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் தகுதி பெறும் அணிகள் அடுத்த ஸ்டேஜ் ஆட்டங்களில் கலந்து கொள்ளும். இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற பலம் பொருந்திய அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடத்தேவையில்லை

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், விராட் கோலி தனது கேப்டன்ஷிப்பின் கீழ் டி20 உலக கோப்பை தொடரை வெல்வதற்கு தகுதியானவர் என தெரிவித்திருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி ஏற்கனவே அறிவித்துள்ளார். ஏறக்குறைய இதுவே கேப்டனாக கோலியின் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கக்கூடும். எனவே அவர் பிற வீரர்களின் உத்வேகத்துடன் நாம் இந்த தொடரை வெல்வோம் என உணர செய்யலாம்.

Also read:  இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை.. எதுக்கு தெரியுமா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதன் மூலம் விராட் கோலிக்கு சரியான ஃபேர்வலை வீரர்கள் அளிக்கலாம். அவருக்காக இதனை செய்யுங்கள்.

ரசிகர்களாலும் காத்திருக்க முடியாது, நம்ம்பிடையே சரியான வீரர்கள் உள்ளனர். நமக்கு இதுவே சரியான தருணம். நாம் செய்யவேண்டியதெல்லாம் போட்டியை தொடங்கி வெற்றி பெருவது மட்டுமே. ஏற்கனவே நம் வீரர்கள் இதே துபாயில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கிறார்கள். 8 முதல் 10 போட்டிகள் வரை விளையாடியிருப்பதால் நல்ல ஃபார்மிலும் இருந்து வருகிறார்கள்.

Also read:    டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட சீன நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்.. நட்பில் விரிசல்?

என்னைப் பொருத்தவரையில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருக்கப் போவது டாப் 3 பேட்ஸ்மேன்கள் தான். ரோகித் சர்மா இதில் முக்கியமானவர். ஐசிசி போட்டிகளில் அவர் படைத்த ரெக்கார்டுகள் ஏராளம். விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் போன்றோர் 15 ஓவர்கள் வரை விளையாடி இந்திய அணிக்கு தரமான அடித்தளம் அமைத்துத் தர வேண்டும்.

மிடில் ஆர்டரில் சில சரியான ஜோடிகள் நம்மிடம் உள்ளனர். ரிஷப் பந்த் அதில் முக்கியமானவர். ஹர்திக் பாண்டியா ஒரு பவர் ஹிட்டர். இவர்கள் சரியாக பங்காற்றினால் போதும் இந்திய அணிக்கு எவ்வளவு பெரும் இலக்கும் துச்சம் தான்.

மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்கு பக்காலமாக இருப்பார். புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் கூடுதல் பலமாக இருப்பார்கள். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் நமதாக இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: