இந்திய அணியையும் பிசிசிஐ-யும் அவமரியாதை செய்யாதீர்கள்: இங்கிலாந்து அணித் தேர்வை சாடும் கெவின் பீட்டர்சன்

இந்திய அணியையும் பிசிசிஐ-யும் அவமரியாதை செய்யாதீர்கள்: இங்கிலாந்து அணித் தேர்வை சாடும் கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்.

பேர்ஸ்டோ விளையாட வேண்டும், அதே போல் பிராட், ஆண்டர்சன் ஆட வேண்டும்.

  • Share this:
    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழு பலமான அணியை இங்கிலாந்து களமிறக்காவிட்டால் அது இந்திய அணியையும் பிசிசிஐ-யும் அவமதித்தது போல் ஆகும் என்று இங்கிலாந்து அணி தேர்வை கெவின் பீட்டர்சன் கடுமையாகச் சாடியுள்ளார்.

    முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன, முதல் டெஸ்ட் 5ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மென் ஜானி பேர்ஸ்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பீட்டர்சன் எதிர்க்கிறார்.

    ஆஸ்திரேலியாவை வெல்வது எப்படி முக்கியமோ அதே போல் இந்திய அணியை இந்தியாவில் வெல்வது மிக முக்கியம். எனவே முழு பலமான இங்கிலாந்து அணியை இறக்காமல் ஆடினால் அது இந்திய அணி, இங்கிலாந்து ரசிகர்கள், பிசிசிஐ ஆகியோரை அவமதிப்பது போல் ஆகும் என்று பீட்டர்சன் எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியது:

    முதல் டெஸ்ட்டில் ஆட இங்கிலாந்து சரியான அணியைத்தான் தேர்வு செய்துள்ளதா என்பது பற்றி பெரிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது போல் இந்தியாவில் வெற்றி பெறுவதும் முக்கியம். எனவே சிறந்த அணியை களமிறக்காமல் விட்டால் அது பிசிசிஐ, இந்திய அணி, இங்கிலாந்து ரசிகர்களை அவமதிக்கும் செயலாகும்.

    பேர்ஸ்டோ விளையாட வேண்டும், அதே போல் பிராட், ஆண்டர்சன் ஆட வேண்டும். இங்கிலாந்தின் சிறந்த வீரர்கள் இந்தியாவுடன் அதிகப் போட்டிகளில் ஆட விரும்புவார்கள். அவர்களைத் தேர்வு செய்யுங்கள்.

    அதன் பிறகு அவர்கள் ஐபிஎல் செல்வார்கள், பணம் சம்பாதிப்பார்கள். ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் பணம்தான் ராஜா. அது ஒரு வர்த்தகம். அதன் பிறகு இவர்கள் பிரேக் எடுத்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு கூறினார் பீட்டர்சன்.
    Published by:Muthukumar
    First published: