Home /News /sports /

ராஜஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்ற விளையாட்டு வீராங்கனை!

ராஜஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்ற விளையாட்டு வீராங்கனை!

ராஜஸ்தானில் தேர்தலில் வெற்றிபெற்ற கிருஷ்ணா பூனியா (Facebook)

ராஜஸ்தானில் தேர்தலில் வெற்றிபெற்ற கிருஷ்ணா பூனியா (Facebook)

#KrishnaPoonia is Now an MLA in #Rajasthan | 2010-ம் ஆண்டு டெல்லி நடந்த காமென்வெல்த் வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

  • News18
  • Last Updated :
ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா பூனியா வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா (36), கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி நடந்த காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 61.51 மீட்டர் தூரம் வட்டை எறிந்து முதலிடம் பிடித்தார். இவரது சாதனையைப் பாராட்டி, 2011-ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Krishna Punia Medal
காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற கிருஷ்ணா பூனியா (GettyImages)


ஹரியானாவில் வசிந்து வந்த இவர், 2000-ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த விரேந்தர் சிங் உடன் திருணம் நடந்ததால், அம்மாநிலத்தில் இருக்கிறார். இந்நிலையில், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிருஷ்ணா பூனியா, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சதுல்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Krishna Punia
காமென்வெல்த்தில் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் தேசிய கொடியுடன் கிருஷ்ணா பூனியா (GettyImages)


தற்போது, நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக அதே சதுல்பூர் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணா பூனியா 18,084 வாக்கு வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மனோஜ் ஞங்காலியை வென்றுள்ளார். அவர், மொத்தம் பெற்ற வாக்குகள் 70,020.

முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் கிருஷ்ணா பூனியா.

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: 5 State Election, Rajasthan Election

அடுத்த செய்தி