ஐபிஎல் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் சூப்பர் ஸ்டார் பினிஷராக எழுச்சி பெற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக ராகுல் திராவிட் உறுதியளித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடந்த நான்காவது போட்டியில் 27 பந்தில் 55 ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார். இத்தொடரில் கடைசி கட்டத்தில் களமிறங்கி 'பினிஷராக' பின்னி எடுத்தார். 4 போட்டியில் 92 ரன் விளாசினார். 'ஸ்டிரைக் ரேட்' 158.62. இதையடுத்து வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்வார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியதாவது:
இந்திய அணியின் கதவுகளை லேசாக தட்டக் கூடாது, ஓங்கி அடிக்க வேண்டுமென வீரர்களிடம் அடிக்கடி கூறுவேன். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் கதவுகளை முழுபலத்துடன் தாக்கியுள்ளார் கார்த்திக். உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஐ.பி.எல்., போட்டிகளில் கடைசி கட்டத்தில் அசத்தினார் தினேஷ் கார்த்திக். இந்த பிரத்யேக திறன் அடிப்படையில் தென் ஆப்ரிக்க தொடருக்கு தேர்வு செய்தோம். கடைசி 5 ஓவரில் அதிரடியாக ரன் சேர்க்க விரும்பினோம்.
இதற்கேற்ப ராஜ்கோட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து மிரட்டினார். 5 ஓவரில் 73 ரன்கள் எடுக்கப்பட்டன. தென் ஆப்ரிக்க தொடரில் கார்த்திக் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.
'டி20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்னும் இறுதி செய்யவில்லை. 18-20 வீரர்களை முதலில் கண்டறிவோம். இதிலிருந்து சிறந்த 15 பேரை தேர்வு செய்வோம்.
இவ்வாறு கூறினார் ராகுல் திராவிட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dinesh Karthik, Rahul Dravid, T20 World Cup