Home /News /sports /

விமானத்தினுள் ஸ்டைலாக நடந்து வந்த தினேஷ் கார்த்திக்- இந்திய வீரர்கள் கரகோஷம்- ஹிட் வீடியோ

விமானத்தினுள் ஸ்டைலாக நடந்து வந்த தினேஷ் கார்த்திக்- இந்திய வீரர்கள் கரகோஷம்- ஹிட் வீடியோ

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக உள்நாட்டில் நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக 2019 க்குப் பிறகு முதல் முறையாக தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்குத் திரும்பினார், மேலும் தினேஷ் கார்த்திக் சக வீரர்களை மகிழ்விப்பதிலும் கில்லாடி என்பதைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட அது பயங்கர ஹிட் ஆகிவிட்டது. 

மேலும் படிக்கவும் ...

    கார்த்திக் வியாழக்கிழமை ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்,  வீடியோவில், இந்திய அணியின் உறுப்பினர்கள் ஒரு விமானத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம், மேலும் கார்த்திக் கூலிங் கிளாஸை அணிந்து கொண்டு  ஸ்டைலாக ஹீரோ போல் நுழைகிறார்,சக வீரர்கள் மகிழ்ச்சியில் சிரித்தபடியே கரகோஷம் செய்கின்றனர், தினேஷ் கார்த்திக் பகிர்ந்த இந்த வீடியோ உடனே வைரலாகிவிட்டது:

    வீடியோ உடனடியாக வெற்றி பெற்றது, கார்த்திக் அதை இடுகையிட்டதிலிருந்து 20,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 1500 ரீட்வீட்களையும் அள்ளியது.

    கார்த்திக் இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரில் மூன்று T20I போட்டிகளிலும் விளையாடியுள்ளார், 1*(2), 30*(21) மற்றும் 6(8) ரன்களை எடுத்துள்ளார்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி வெள்ளிக்கிழமை ராஜ்கோட்டில் நடக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்கும் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, India vs South Africa, Viral Video

    அடுத்த செய்தி