Dinesh Karthik : அந்த 302 அதிர்ஷ்டசாலிகளுள் நானும் ஒருவன் என்பது மிகவும் ஸ்பெஷல் - மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக்

130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் சார்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய 302 அதிர்ஷ்டசாலி கிரிக்கெட்டர்களுள் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சிதரக்கூடியது

  • Share this:
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் நியூஸ்18-க்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வாய்ப்புகள் குறித்து தாம் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள இரண்டு உலகக் கோப்பை டி-20 போட்டிகளில் விளையாடுவதில் தான் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவின் மிக திறமைவாய்ந்த ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கிரிக்கெட்டின் முதன்மையான வடிவமான டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றதில் தான் நன்றியுள்ளவனாக இருப்பதாகவும், இந்த மரியாதை பெற்ற மிகச் சிலரில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2004ம் ஆண்டு மும்பையில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக தினேஷ் கார்த்திக், கடைசியாக 2018ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். மொத்தம் 26 டெஸ்டில் விளையாடி, ஒரு செஞ்சுரி, 7 அரை சதம் என 1025 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் ரன் சராசரி 25 ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் சார்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய 302 அதிர்ஷ்டசாலி கிரிக்கெட்டர்களுள் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சிதரக்கூடியது என்று கூறும் கார்த்திக், குறைந்த ஓவர்கள் கொண்ட வடிவில் 152 சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை எவ்வாறு வடிவம் பெற்றது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்போதுமே மிகவும் திருப்தி அடைந்த ஒருவராக இருந்தேன், இந்த விளையாட்டை விளையாடியதற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏனென்றால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலிருந்து, இத்தனை ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வீரர்கள் மொத்தமே 302 பேர் தான். இதில் நானும் ஒருவன் என்பதில் மிகுந்த சந்தோஷம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

Also Read:   விராட் கோலியை திகிலூட்டிய அந்த ஒரு ஓவர்.. காரணம் மகேந்திர சிங் தோனி தான்!

ஆரம்பத்தில் நாட்டுக்காக ஒரு போட்டியாவது விளையாட வேண்டும் என விரும்பினேன், இப்போது 150க்கும் மேற்பட்ட போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இந்தியாவின் நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடியது உண்மையிலேயே ஒரு பயங்கரமான பயணம்.

தினேஷ் கார்த்திக்


நாட்டுக்காக 15 முதல் 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியிருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அடுத்த இலக்கு டி20 வடிவத்தின் மீது இருப்பதாகவும், எதிர்வரும் இரண்டு டி-20 உலகக் கோப்பை (2021 - இந்தியா ; 2022 - ஆஸ்திரேலியா) தொடர்களிலும் விளையாடுவதற்கான உடல் தகுதியை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

Also Read:   தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்: தயார் என கூறும் தினேஷ் கார்த்திக்!

இதே உடல் தகுதியுடன் நீடித்தால் மேலும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை தன்னால் கிரிக்கெட் விளையாட முடியும் எனவும் தினேஷ் கார்த்திக் கூறினார்.

முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: