முகப்பு /செய்தி /விளையாட்டு / அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? பயிற்சியாளர் டிராவிட் வைத்த சஸ்பென்ஸ்!

அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா? பயிற்சியாளர் டிராவிட் வைத்த சஸ்பென்ஸ்!

தினேஷ்

தினேஷ்

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் உடல்தகுதி குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் விளையாடுவரா மாட்டார என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இந்தியா அணி  மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று குரூப் -1  பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில்  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பீல்டிங்க் செய்த போது விக்கெட் கீப்பிங்க் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் காலில் சுலுக்கு எற்பட்டு ஆட்டத்தில் இருந்து  பாதியில் வெளியேறினார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இதனால் அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா இல்லையா என கேள்வி எழுந்தது. இதனையடுத்து வங்கதேச அணிக்கு எதிரான போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  ,  தினேஷ் கார்த்திக் இன்றைய பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து போட்டிக்கு முன்னர் தான் தெரியும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விராட் கோலி ரூம் வீடியோ : மன்னிப்பு கேட்ட பெர்த் ஹோட்டல்.. ஊழியர்கள் பணிநீக்கம்

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் டி20 உலககோப்பை தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றார். இந்த டி20 தொடரில் அவரது ஆட்டம் சற்று விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் ரிஷப் பந்த்-க்கு வாய்ப்பு தர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது சந்தேகம் இருப்பதால் அடுத்த போட்டியில் ரிஷப் பந்த்-கே அதிக வங்கதேசவுடனான ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Cricket, Dinesh Karthik, Rahul Dravid