Home /News /sports /

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தேவையே இல்லை- அஜய் ஜடேஜா தைரியம்

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தேவையே இல்லை- அஜய் ஜடேஜா தைரியம்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் கடுமையாக உழைத்து ஐபிஎல் தொடரில் சிலபல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி தன் இடத்தை வென்றுள்ளார். ஆனால் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தினேஷ் கார்த்திக்கெல்லாம் இந்திய அணியில் தேவையேயில்லை, அவர் நல்ல வர்ணனையாளர், அதுதான் அவருக்குச் சரி என்று கூறி, தைரியம் காட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தினேஷ் கார்த்திக் கடுமையாக உழைத்து ஐபிஎல் தொடரில் சிலபல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி தன் இடத்தை வென்றுள்ளார். ஆனால் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தினேஷ் கார்த்திக்கெல்லாம் இந்திய அணியில் தேவையேயில்லை, அவர் நல்ல வர்ணனையாளர், அதுதான் அவருக்குச் சரி என்று கூறி, தைரியம் காட்டியுள்ளார்.

    “கடந்த டி20 உலகக்கோப்பைக்குப் பிறகே ஆக்ரோஷம்தான் நம் வழி என்று ரோஹித் சர்மா கூறினார் என்றால் விராட் கோலியை முதலில் அணியிலிருந்து தூக்க வேண்டும். தோனி வழியைக் கடைப்பிடித்தால் கோலி அணியில் இருப்பார் என்றா தினேஷ் கார்த்திக்கும் இருப்பார். விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் அணியில் இருப்பார்கள் என்றால் தினேஷ் கார்த்தி இருக்க வேண்டும், அவர் அப்போது அவசியம்.

    ஆனால் ரோஹித், கோலியில் இருவர் ஒருவர் இல்லாத போது இருவரும் இல்லாத போது தினேஷ் கார்த்திக்கும் தேவையில்லை. ஆம்! நான் தேர்வாளராக இருந்தால் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ய மாட்டேன், அவருக்கு எனக்குப் பின்னால் வர்ணனையில் ஒரு இடம் கொடுப்பேன். அவர் நல்ல வர்ணனையாளர்.

    தோனி பாணியாக இருந்தால் ரோஹித், கோலி, கார்த்திக். ஆனால் நவீன கிரிக்கெட்டுக்கு கார்த்திக் தேவையில்லை. கார்த்திக்கை உட்கார வைக்கலாம். கோலி பார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரையும் உட்கார வைக்கலாம்.

    பந்து வீச்சில் நான் ஷமி, பும்ரா, அர்ஷ்தீப், செஹலை நிச்சயம் வைத்திருப்பேன். அதே போல் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக், சூரியகுமார் யாதவ்வும் அணிக்குத் தேவை” என்றார் அஜய் ஜடேஜா.

    ஆசியக் கோப்பைக்கான் இந்திய அணியில் ரோஹித், கோலி, தினேஷ் கார்த்திக் என்று பழம்பட்டாளமே உள்ளது, ஆனால் பாவம் சஞ்சு சாம்சன் இல்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, Dinesh Karthik, T20 World Cup

    அடுத்த செய்தி