ஆஸ்திரேலியா தொடரில் பிரமாதமாக ஆடிய அஸ்வினை இங்கிலாந்து தொடரிலிருந்து இந்திய அணியில் தொடர்ந்து ஒதுக்கப்படுவது குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணியில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் விளையாடினார். அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டும் கடைசிவரை 4 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
டி20 உலகக் கோப்பைக்கு அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றாலும் அதிலும் எந்த பயனும் இல்லை. பயிற்சிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய அனுபவ வீரர் அஸ்வினை, பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலி தேர்வு செய்யவில்லை. கோலிக்கு அஸ்வினைத் தேர்வு செய்தது பிடிக்கவில்லை. அதனால் அவரை புறக்கணிக்கிறார், ரவிசாஸ்திரி, பவுலிங் கோச் பாரத் அருண் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. கேட்டால் ஏதாவது சாக்குப் போக்கு சொல்வார்கள் என்று தெரிகிறது.
இந்திய அணியில் இடம் பெற்றும் ப்ளேயிங் லெவனில் அனுபவ வீரர் அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிரிக்கெட் அல்லாத பிற காரணங்களால் அஸ்வின் ஒதுக்கப்படுகிறாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. கோலியின் சர்வாதிகாரம் குறித்தும் கேள்விகள் எழுந்தன. அனில் கும்ப்ளேயை வெளியேற்றியது முதல் அஸ்வின் ஒழிப்பு வரை கோலியின் செய்கைகள் சர்வாதிகாரப் போக்கு என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது, இதனைத் தீவிரமாகக் கேட்டவர் நிக் காம்ப்டன்.

திலிப் வெங்சர்க்கார்.
இந்த சூழலில் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்காரும் அஸ்வின் புறக்கணிப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அஸ்வின் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருவது விசாரணைக்குரியதாகும். எல்லா வடிவங்களிலும் சிறந்த ஸ்பின்னர் 600 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். மூத்த ஸ்பின்னர், ஆனால் அவருக்கு அணியில் இடமில்லை. எனக்குப் புரியவில்லை இங்கிலாந்திலும் அவரை எடுக்கவில்லை. அவரை ஏன் டி20 உலகக்கோப்பைக்கு அணியில் தேர்வு செய்ய வேண்டும் பிறகு உட்கார வைக்க வேண்டும், எனக்கு புரியாத புதிராக உள்ளது. நிச்சயம் இது விசாரனைக்குரியதே
இவ்வாறு வெங்சர்க்கார் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.