Home /News /sports /

5 இன்னிங்ஸ் 704 ரன்கள் 3 பெரிய சதங்கள்; டான் பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த சராசரி- இவரையெல்லாம் செலக்டர்ஸ்களுக்கு தெரியாதா?

5 இன்னிங்ஸ் 704 ரன்கள் 3 பெரிய சதங்கள்; டான் பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த சராசரி- இவரையெல்லாம் செலக்டர்ஸ்களுக்கு தெரியாதா?

சர்ஃபராஸ் கான்

சர்ஃபராஸ் கான்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தொடர்ந்து சதங்கள், அரைசதங்கள் என்று டான் பிராட்மேன் ரக சீரான தன்மையுடன் ரன்களைக் குவித்து வரும் வீரரைப் பற்றி அணித்தேர்வாளர்களுக்கு தெரியாதா, அவர் ஏன் இன்னும் இந்திய அணிக்காகப் பரிசீலிக்கப்படவில்லை என்று கேட்கிறார் திலிப் வெங்சர்க்கார்.

மேலும் படிக்கவும் ...
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் தொடர்ந்து சதங்கள், அரைசதங்கள் என்று டான் பிராட்மேன் ரக சீரான தன்மையுடன் ரன்களைக் குவித்து வரும் வீரரைப் பற்றி அணித்தேர்வாளர்களுக்கு தெரியாதா, அவர் ஏன் இன்னும் இந்திய அணிக்காகப் பரிசீலிக்கப்படவில்லை என்று கேட்கிறார் திலிப் வெங்சர்க்கார்.

    ஐபிஎல் பணமழை பளபளப்பு மீடியா கவனம், சோஷியல் மீடியா ஹீரோவாவது என்பதைத் தாண்டி உண்மையான கிரிக்கெட்டில் பிரகாசித்து வரும் மும்பை வீரர் சர்பராஸ் கான் என்பவர் செலக்டர்கள் கண்களுக்கு இன்னும் புலப்படவில்லையா என்று திலிப் வெங்சர்க்கார் கேட்கிறார்.

    மீண்டும் மீண்டும் ஹனுமா விஹாரி, என்னாளும் ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில் என்ன தோல்வி கண்டாலும் மீண்டும் மீண்டும் வாய்ப்புத் தருவது.. ஐபிஎல் கேப்டன்சிகளில் மீடியா கவனம் பெறும் ஷ்ரேயஸ் அய்யரை அடுத்த கோலி என்பது என்றுதான் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, உண்மையான கிரிக்கெட்டில் ரன்களைக் குவிப்போர் ஏன் அணித்தேர்வுக்குழுவின் கவனத்திற்கோ, ஐபிஎல் வருவாயில் புளகாங்கிதம் அடையும் சவுரவ் கங்குலிக்கோ தெரிவதில்லை?

    மும்பை பேட்டர் சர்பராஸ் கான், ரஞ்சி டிராபியில் இந்த ஆண்டு டாப்பில் உள்ளார். 5 இன்னிங்ஸ்களில் 704 ரன்கள். சராசரி 140.83. இதில் 3 பெரிய சதங்கள் ஒரு அரைசதம். கடந்த ரஞ்சி சீசனில் 928 ரன்களை 154.66 என்ற சராசரியில் எடுத்து அதில் 3 சதங்கள் 2 அரைசதங்களை எடுத்துள்ளார் சர்பராஸ் கான்.

    நடப்பு ரஞ்சி சீசனில் சர்பராஸ் கான் காலிறுதியில் 153 ரன்களை விளாசியதைத் தொடர்ந்து அவரது முதல் தர கிரிக்கெட் 23 போட்டிகளில் சராசரி 80.42. கிரேட்டஸ்ட் டான் பிராட்மேனின் 95.14 சராசரிக்குப் பிறகு சிறந்த சராசரி. இப்படி விளாசி வரும் சர்பராஸ் கான் இன்னும் என்ன நிரூபிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார், “இப்போது இந்திய அணியில் சர்பராஸ் கான் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். ரஞ்சி டிராபியில் டன்கள் கணக்கில் ரன்களைக் குவித்து வருகிறார். இன்னும் கூட இவர் மீது கருணை ஏற்படவில்லை எனில் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

    இந்திய அணியில் தேர்வு செய்யப்பட அவர் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? மும்பைக்காக ஒவ்வொரு ஆண்டும் 800 ரன்களைக் குவிக்கிறார் சர்ஃபராஸ் கான்.

    நான் சர்ஃபராச் கானை 12 வயது முதல் பார்த்து வருகிறேன், அவர் ஸ்மார்ட் கிரிக்கெட்டர், வெற்றிக்கான வேட்கை நிரம்பியவர். நல்ல உடல் தகுதி, அனைத்தையும் விட நீண்ட நேரம் பெரிய இன்னிங்ஸை ஆடும் திறன் கொண்டவர். போட்டிகளை வெல்வதில் நாட்டம் உள்ளவர் இது ஒரு அரிதான திறமை.

    வேகப்பந்து, ஸ்பின் இரண்டையும் ஆடுவதில் தேர்ச்சி பெற்றவர். ஆகவே அவர் வேறு என்ன செய்ய வேண்டும்? அவர் ஆட்டமும் பார்க்க ஒரு பெரிய ட்ரீட் தான்.” இவ்வாறு கூறினார் திலிப் வெங்சர்க்கார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Ranji Trophy, Team India

    அடுத்த செய்தி