ஸ்டார்கள் சொதப்பினால் மேலும் மேலும் வாய்ப்பு, அஸ்வின் சொதப்பினால் உடனே வெளியே- சுனில் கவாஸ்கர் பொருமல்

ஸ்டார்கள் சொதப்பினால் மேலும் மேலும் வாய்ப்பு, அஸ்வின் சொதப்பினால் உடனே வெளியே- சுனில் கவாஸ்கர் பொருமல்

சுனில் கவாஸ்கர்

குழந்தைப் பிறப்புக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற கோலியையும் அதே காரணத்துக்காக விடுப்பு கொடுக்கப்படாத டி.நடராஜனையும் ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்திய சுனில் கவாஸ்கர் அஸ்வினுக்கு ஒரு நீதி மற்ற ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
குழந்தைப் பிறப்புக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சென்ற கோலியையும் அதே காரணத்துக்காக விடுப்பு கொடுக்கப்படாத டி.நடராஜனையும் ஒப்பிட்டு இருவருக்கும் தனித்தனி நீதியா என்று கேட்டு பரபரப்பு ஏற்படுத்திய சுனில் கவாஸ்கர் அஸ்வினுக்கு ஒரு நீதி மற்ற ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தி இந்து, ஸ்போர்ட்ஸ்டார் ஆங்கில ஊடகத்தில் தான் எழுதிய பத்தி ஒன்றில் கவாஸ்கர் கடுமையாக இந்திய அணி நிர்வாகத்தின் பாரபட்சப் போக்குகளைச் சாடி எழுதியுள்ளார். மேலும் பவுலர்களுக்கு ஒரு விதி அணியில் நன்கு காலூன்றி விட்ட பேட்ஸ்மென்களுக்கு வேறொரு விதி என்றும் அவர் சாடியுள்ளார்.

அதாவது அஸ்வின் நேரடியாக உள்ளதை உள்ளபடியே கூறுபவர் இதனால் அவருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறும் சுனில் கவாஸ்கர், “அஸ்வினின் பவுலிங் திறமைகள் மீது காட்டுமிராண்டித்தனமானவர்களே சந்தேகம் கொள்ள முடியும். ஆனால் அவர் சில வேளைகளில் ஒதுக்கப்படுவது பவுலிங் திறமைகளின் மீது ஏற்பட்ட சந்தேகங்களுக்காக அல்ல, அஸ்வின் அணிக்கூட்டங்களில் தன் மனதில் பட்டதை நேரடியாக சொல்லி விடக்கூடியவர் மற்றவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

ரவிசந்திரன் அஸ்வின்


4 டெஸ்ட் சதங்களையும் 350 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள அஸ்வின் போன்ற ஒரு பவுலரை எந்த நாடும் வரவேற்கவே செய்யும். ஒரு போட்டியில் அவர் விக்கெட்டுகளைக் குவிக்கவில்லை என்றால் உடனே அடுத்த போட்டிக்கு உட்கார வைக்கப்படுவார். ஆனால் ஸ்டார் பேட்ஸ்மென்களுக்கு இது நடப்பதில்லை, அவர்கள் எவ்வளவு சொதப்பினாலும் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அஸ்வினுக்கோ வேறொரு நீதி்” என்று சுனில் கவாஸ்கர் பொருமித்தள்ளியுள்ளார்.

2017ம் ஆண்டு அஸ்வின் மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடினார் அஸ்வின், அந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின், இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து அனாவசியமாகக் கழற்றி விடப்பட்டார்.

தினசரி தனது பவுலிங்கை மேம்படுத்தி புதிய புதிய பாணிகளை வளர்த்தெடுத்து வரும் அஸ்வின் அன்று அடிலெய்ட் பிட்சுக்கு ஏற்றவாறு தன் பந்து வீச்சை மாற்றிக் கொண்டு அபாரமாக வீசினார், ரன் மெஷின் ஸ்மித்தை அற்புதமான பந்தில் காலி செய்தார். நிச்சயம் 2017-ல் கடைசியாக மே.இ.தீவுகளுக்கு எதிராக வீசிய அஸ்வின் இப்போது தன்னிடம் வேறு சில பவுலிங் ஆயுதங்களையும் கூர் தீட்டி வைத்திருப்பார். எனவே கவாஸ்கர் கூறுவது போல் அவரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மீண்டும் அணியில் அழைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
Published by:Muthukumar
First published: