• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உண்மையான ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்பிரிட்னா இதுதான் - சர்ச்சை வேண்டாம் என்று 1 ரன்னை மறுத்த டேரில் மிட்செல்

உண்மையான ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்பிரிட்னா இதுதான் - சர்ச்சை வேண்டாம் என்று 1 ரன்னை மறுத்த டேரில் மிட்செல்

மிட்செல் மறுத்த ரன்.

மிட்செல் மறுத்த ரன்.

ஆதில் ரஷீத் வீசிய பந்தை ஜேம்ஸ் நீஷம் நேராக ஆடினார், மிட்செல் எதிர்முனையில் இருந்தார். டேரல் மிட்செல் குறுக்கே வராமல் இருந்திருந்தால் ஆதில் ரஷீத் அதை கிளீன் ஆக பிடிப்பார் என்ற நிலைதான் இருந்தது. இதன்  மூலம் ஒரு ரன்னும் கிடைக்கும் ஆனால் டேரல் மிட்செல் அந்த ரன் வேண்டாம் என்றார்.

  • Share this:
    நியூசிலாந்து அணியின் வெற்றி நாயகன் டேரில் மிட்செல் புது ஹீரோவாக டி20 உலகக்கோப்பையில் நேற்று எழுச்சிப்பெற்றார், நியூசிலாந்து அணியை சாத்தியமில்லாத இடத்திலிருந்து வெற்றி பெறச் செய்தது மட்டுமல்ல, கிரிக்கெட் ஆட்ட உணர்வு என்ற விதத்தில் ஒரு உண்மையான ஒரு ஸ்பிரிட்டையும் வெளிப்படுத்தினார்.

    மன்கடிங் செய்வது, த்ரோ செய்யும்போது பேட்டர் மட்டையில் பட்டு செல்லும் ஓவர் த்ரோவுக்கு அசிங்கமாக ஓடுவது, இதையெல்லாம் செய்து விட்டு அப்படித்தான் செய்வென் என்று கூறுவது போன்ற கிரிக்கெட் அற்பத்தனங்களுக்கு மத்தியில் டேரல் மிட்செல் நேற்று செய்த காரியம் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது, இதனால் நியூசிலாந்து தோற்றிருந்தாலும் அது பற்றி கவலையில்லை என்கிறார்.

    நேற்று அபுதாபியில் நடந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலக்கை விரட்டும் நியூசிலாந்து அணி ரன்களுக்குத் தவித்துக் கொண்டிருந்தது, ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், கான்வே இன்னிங்ஸ் இல்லையெனில் இந்நேரம் இங்கிலாந்துதான் இறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும், இந்நிலையில் சேசிங்கில் 18வது ஓவரில் ஆதில் ரஷீத் வீசும்போது தான் ஒரு ரன்னை ஓடினால் அது பவுலர் ஆதில் ரஷீத் பீல்டிங் முயற்சியைத் தடுப்பதாக அமைந்து விடும் என்று ஒரு ரன்னைத் துறந்தார். வேண்டாம் என்றார்.

    ஆதில் ரஷீத் வீசிய பந்தை ஜேம்ஸ் நீஷம் நேராக ஆடினார், மிட்செல் எதிர்முனையில் இருந்தார். டேரல் மிட்செல் குறுக்கே வராமல் இருந்திருந்தால் ஆதில் ரஷீத் அதை கிளீன் ஆக பிடிப்பார் என்ற நிலைதான் இருந்தது. இதன்  மூலம் ஒரு ரன்னும் கிடைக்கும் ஆனால் டேரல் மிட்செல் அந்த ரன் வேண்டாம் என்றார். ஓடியிருந்தால் தான் ஓடியதால்தான் அந்த பந்தை ரஷீத்தினால் பிடிக்க முடியவில்லை என்ற சர்ச்சை கிளம்பியிருக்கும் என்கிறார் மிட்செல்,
    இது தொடர்பாக மிட்செல் கூறும்போது,  “நான் ஓட முயற்சித்த போது ரஷீத் பந்தைப் பிடிப்பதற்கு குறுக்காக வருவேன் என்றுதான் நினைத்தேன்.

    இது என் மூலம் ஒரு சர்ச்சையாவதை நான் விரும்பவில்லை. ஆட்டத்தை நல்ல ஸ்பிரிட்டுடன் ஆட வேண்டும். நான் அந்த ரன்னை எடுத்திருந்தால் அது என் தவறாகவே போயிருக்கும். அதனால் என்ன? மீண்டும் தொடங்குவோம், ஆடுவோம், அவ்வளவுதானே. ஆனால் அந்த ஒரு ரன் ஆட்டத்தின் முடிவின் மீது தாக்கம் செலுத்தாது அதிர்ஷ்டம்தான்” என்றார்.

    டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முக்கியமான ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் சிங்கிளை எடுக்க மறுத்து ஆடும் இவரது ஸ்பிரிட் எங்கே, தனியார் கிரிக்கெட்டில் ஒரு ரன்னுக்காக பீல்டர் த்ரோ செய்த பந்து பேட்ஸ்மென் மட்டையில் பட்டு ஒரு ரன் ஓடுவது எங்கே. இருவரும் எதிரெதிர் முனையில் உள்ளனர். அதைவிட அப்படி ஒரு ரன்னை எடுத்து விட்டு அப்படித்தான் செய்வேன் என்ற ரீதியில் பேசுவது கல்லி கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் உள்ள பெரும் வித்தியாசத்தை காட்டுகிறது. உண்மையான் ஸ்போர்ட்ஸ்மேன் யார் என்பதை டேரல் மிட்செல் நேற்று காட்டி விட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: