ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தொடக்கம் முதலே பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் விராட் கோலியை முதல் சீசன் ஏலத்தின் போது நிராகரித்த அணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
2008-ம் ஆண்டு விராட் கோலி இந்திய அணியில் ஒருநாள் போட்டிகள் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் குறுகிய காலத்திலேயே தனித்துவமான வீரராக அறியப்பட்டார். இந்திய அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக ரன் மெசின் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ள விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல் கடந்த சீசன் வரை பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வந்தார். பெங்களூரு அணி என்றாலே விராட் கோலி என்று நினைவுக்கு வரும் வகையில் அவரது ஆட்டம் இருக்கும்.

விராட் கோலி
ஐபிஎல் தொடர்களில் இதுவரை பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் பெறவில்லை என்றாலும் விராட் கோலி அணிக்காக மகத்தான பங்களிப்பை அளித்துள்ளார்.
நடந்து முடிந்த சீசனில் கூட 14 ஆட்டங்களில் விளையாடி 464 ரன்கள் அவர் குவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் அவர் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் தனக்கான இடத்தை எதிர்பார்த்து கோலி இருந்த நேரத்தில், சரியாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி என்று 8 அணிகள் களமிறங்கின. அணிகளுக்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
சச்சின், கங்குலி, டிராவிட் என்று ஜாம்பவான்கள் போட்டியில் இருந்த நிலையில் தோனி, சென்னை அணிக்காக ரூ.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
விராட் கோலி பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டபோது டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் அவரை எடுக்க ஆர்வம் காட்டின.

விராட் கோலி. (IPL)
ஏலத்தில் விலை ஏறிக்கொண்டே போக இறுதியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மட்டும் போட்டி போட்டு கோலியை ஏலம் கேட்டன. எனினும், விராட் கோலியை நிராகரித்த டெல்லி அணி, பிரதீப் சங்வான் என்ற வீரரை 50 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுத்தது.
30 ஆயிரம் டாலர்களுக்கு விராட் கோலியை பெங்களூர் அணி வசப்படுத்தியது. பெங்களூர் அணியில் விராட் கோலி எப்படி விளையாடினார் என்பது உங்களுக்கு தெரிந்த வரலாறுதான்.
ஆனால், 50 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரதீப் சங்வான் மூண்று ஆண்டுகள் டெல்லி அணியில் இருந்தாலும் சோபிக்காமல் போனார்.
Also See...
சச்சினைப் போல் வெற்றிக் கோப்பையுடன் விடைபெறுவாரா தல 'தோனி'!
உலகக் கோப்பை தொடரிலிருந்து ஸ்டெயின் விலகல்! - ரசிகர்கள் அதிர்ச்சி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.