இந்தியாவின் ஸ்டார் டி20 பேட்ஸ்மேனாக சமீப காலமாக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைலால் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடிக்கும் சூர்யகுமார் யாதவ், வாழ்நாளின் சிறப்பான பார்மில் தற்போது உள்ளார். அதற்கு உதாரணமாக இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்தார். முதல் இரு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இலங்கை தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில், வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டியில் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சூர்யகுமார். மொத்தம் 9 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த போட்டிக்குப் பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூர்ய குமார் யாதவ் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அப்போது சூர்யகுமார் யாதவ்விடம் ஜாலியாக கிண்டலடித்து பேசினார் ராகுல் டிராவிட். இந்தியாவின் சிறந்த தடுப்பாட்ட வீரராகவும் டெஸ்ட் ஜாம்பவானாகவும் கருதப்படுபவர் ராகுல் டிராவிட். எதிரணி வீரர்கள் பந்து வீசி சோர்ந்து போகும் அளவிற்கு தடுப்பாட்டம் ஆடும் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தூண் என்று கூறுவார்கள்.
இவரின் ஸ்டைலுக்கு முற்றிலும் மாறுபட்ட டி20 அதிரடி ஆட்டத்தை ஆடுபவர் சூர்யகுமார் யாதவ். எனவே, போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை பாராட்டிய ராகுல் டிராவிட், என்னுடன் இருக்கும் இந்த இளைஞர் நான் விளையாடும் போது சிறுவனாக இருந்திருப்பார்.
இதையும் படிங்க: ‘டி20 கேப்டன்ஷிப்பை பாண்ட்யாவிடம் ரோஹித் ஒப்படைக்க வேண்டும்’ – முன்னாள் வீரர் பரபரப்பு பேட்டி
நல்ல வேலை நான் பேட்டிங் செய்வதை அவர் பார்த்து வளரவில்லை. நிச்சயம் எனது பேட்டிங்கை அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன் என்று கிண்டாலாக பாராட்டினார். இதைக்கேட்டு சிரிப்பலையில் விழுந்த சூர்யகுமார் யாதவ், உங்கள் பேட்டிங்கையைும் பார்த்தவன் தான் நான் என்றார். இருவரின் இந்த ஜாலியான உரையாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி பகிரப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Rahul Dravid, Suryakumar yadav