பாகிஸ்தானை வெளியேற்ற இந்தியா வேண்டுமென்றே தோற்றதா...? சர்பராஸ் அகமது ஓபன் டாக்...!

உலகக்கோப்பை தொடரை பொருத்தவரை பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் மிகவும் மோசமாகவும் இறுதியில் ஓரளவுக்கு சிறப்பாகவும் செயல்பட்டது.

பாகிஸ்தானை வெளியேற்ற இந்தியா வேண்டுமென்றே தோற்றதா...? சர்பராஸ் அகமது ஓபன் டாக்...!
சர்பராஸ் அகமது
  • News18
  • Last Updated: July 8, 2019, 11:11 AM IST
  • Share this:
உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வெளியேற்ற இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோல்வியடைந்ததா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது பதில் அளித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. லீக் தொடருடன் பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற அணிகள் நடையைக் கட்டின.


உலகக்கோப்பை தொடரை பொருத்தவரை பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் மிகவும் மோசமாகவும் இறுதியில் ஓரளவுக்கு சிறப்பாகவும் செயல்பட்டது. ஆனால், தொடக்க ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விகளால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கனவாகவே முடிந்தது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து உடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இதனால், ஒரே நாளில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். ஆனால், இந்தியா தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது


பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானார். மூளையில்லாத முட்டாள் கேப்டன் என்ற விமர்சனங்களை எல்லாம் அந்த அணியின் முன்னாள் வீரர்களே முன்வைத்தனர்.

எனினும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தி அணியை தொடர்ச்சியாக 4 வெற்றிகள் பெறும் அளவிற்கு கொண்டு சென்றார் சர்பராஸ் அகமது.

பாகிஸ்தான் | Pakistan
பாகிஸ்தான் அணி


பாகிஸ்தான் அணி நாடு திரும்பியதும் கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சர்பராஸ் அகமதுவிடம் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எனது ஆட்டம் எனக்கு திருப்திகரமாக உள்ளது. எனவே நான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகமாட்டேன். அதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே முடிவு செய்யட்டும் என்று தெரிவித்தார்.

அதே போல் பாகிஸ்தானை வெளியேற்றுவதற்கே இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்தது என்ற பரவலாக பேசப்பட்ட கருத்திற்கு பதிலளித்த சர்பராஸ் அஹமது, இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து அணி அந்த வெற்றிக்கு தகுதியானது தான் என்றார்.

பேட்டிங்கா இல்ல ஏர்போர்ட்டுக்கா?... பாகிஸ்தானை கிண்டலடித்து வைரலாகும் மீம்ஸ்பாகிஸ்தானை வறுத்தெடுத்த மீம் கிரியேட்டர்ஸ்... வைரலாகும் மீம்ஸ்

First published: July 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்