மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கும், பும்ராவிற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Vijay R | news18
Updated: July 16, 2019, 4:44 PM IST
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்!
இந்திய அணி
Vijay R | news18
Updated: July 16, 2019, 4:44 PM IST
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் தோனி இடம்பெறுவாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி துவங்க உள்ளது. மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணி வரும் 19ம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக ஆங்கில பத்திரிகையிடம் பேசிய தேர்வு குழு உறுப்பினர், “இந்திய அணி தேர்வு குழுவினரிடம் தோனி இதுவரை எந்தவிதமான தொடர்பும் கொள்ளவில்லை.

அவர் அணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பும் வெளியிடவில்லை. உலகக் கோப்பை தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் அணியில் இடம்பெறுவாரா? என்பது பற்றி தேர்வு குழுவில் முடிவெடுக்கப்படும்'' என்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கும், பும்ராவிற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். டெஸ்ட் போட்டிகளில் கோலியும், பும்ராவும் அணிக்கு திரும்புவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Also Read : சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

Also Read : ஐசிசியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த 2 இந்திய வீரர்கள்... கேப்டன் வில்லியம்சன் தான்!

Also Read : ‘பவுண்டரி முறை’ ஐசிசியை வறுத்தெடுத்த அமிதாப் பச்சன், யுவ்ராஜ் சிங்!

Also Watch

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...