விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

#Dhoni name trending in Twitter India During 4th ODI #Mohali | தோனி விளையாடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!
ட்விட்டர் டிரெண்டிங்கில் தோனி. (Twitter)
  • News18
  • Last Updated: March 11, 2019, 3:36 PM IST
  • Share this:
மொஹாயில் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் தோனி விளையாடவில்லை. ஆனால், ட்விட்டரில் அவரது பெயர் டிரெண்டிங்கில் இருந்த ஆச்சர்யமான நிகழ்வு நடந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


India Loss, இந்திய அணி தோல்வி
இந்திய அணி தோல்வி. (AP)


இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால், பீல்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்தப் போட்டியில் தோனி விளையாடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Dhoni, தோனி
தோனி களமிறங்கியபோது செல்போனில் டார்ச் லைட் அடித்த ரசிகர்கள். (CricketAustralia)
இதன் காரணமாகவே, தோனியின் பெயரை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். நேற்று (மார்ச் 10) இந்திய அளவில் 3-வது இடத்தில் தோனியின் பெயர் டிரெண்டிங்கில் இருந்தது.போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரின் பெயர் டிரெண்டிங்கில் வருவது வழக்கம். ஆனால், விளையாடாத தோனியின் பெயர் டிரெண்டிங்கில் வந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

350-க்கு மேல் அடித்தும் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா செய்த மோசமான சாதனை!

VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

Also Watch...

First published: March 11, 2019, 3:11 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading