இந்திய அணியில் மீண்டும் எப்போது தோனி! புதுத் தகவல்

Vijay R | news18-tamil
Updated: September 22, 2019, 10:10 PM IST
இந்திய அணியில் மீண்டும் எப்போது தோனி! புதுத் தகவல்
மகேந்திர சிங் தோனி
Vijay R | news18-tamil
Updated: September 22, 2019, 10:10 PM IST
உலகக் கோப்பைத் தொடருக்கு பின் ராணுவத்தில் 2 மாதங்கள் பயிற்சி முடிந்த தோனி, இந்த வருடம் நவம்பர் மாதம் வரை அணியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவப் பயிற்சி முடிந்து இடைவேளையில் இருக்கும் தோனி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரானத் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு தோனிக்கு போதிய நேரம் இல்லை என்று இந்திய அணியின் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரஷாத் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த இடைவேளையை நவம்பர் மாதம் வரை நீடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. விஜய் அஷாரே கோப்பை மற்றும் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.


டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மேற்கிந்திய தீவுகள் தொடரில் தோனி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் விராட் கோலி பதிவு செய்த ஒரு புகைப்படத்தால் தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற மிகப் பெரிய வதந்தி வைரலானது.

பின்னர் தோனியின் மனைவி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரஷாத் இதனை மறுத்தனர். விராட் கோலியும் ஓய்வு என்பது தோனியின் தனிப்பட்ட முடிவு, இது தொடர்பாக யாரும் கருத்து கூற வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

Also Watch

Loading...

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...