ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் அசாரூதின்!

தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் அசாரூதின்!

தோனி - அசாரூதின்

தோனி - அசாரூதின்

தோனி ஓய்வு குறித்து தெளிவான முடிவை அறிவிக்கும் வரை ஓய்வு குறித்த கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருக்கும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மகேந்திர சிங் தோனி முழு உடல் தகுதி உள்ளவரை தோனி ஓய்வு பெற வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடருக்கு பின் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவிப்பார், அவர் ஓய்வு அறிவிக்காவிட்டாலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காது என பல வியூகங்கள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவ பணியில் ஈடுபட உள்ளதாக கூறி தோனி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார்.

ஆனால் தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகள் மட்டும் இன்னும் குறையவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினிடம் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு “தோனி ஓய்வு பெறுவதற்கு முன் தேர்வு குழுவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எத்தனை காலம் அவர் விளையாட உள்ளார், எப்படி விளையாடுகிறார், ஆட்டத்தில் அவரது அணுகுமுறை எப்படி உள்ளது என்ற கேள்விகள் முன்வைக்கப்படும்.

தோனி ஓய்வு குறித்து தெளிவான முடிவை அறிவிக்கும் வரை ஓய்வு குறித்த கேள்விகள் எழுந்து கொண்டு தான் இருக்கும். என்னை கேட்டால் தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கும் வரை, அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை அவர் ஓய்வு பெற கூடாது. அவர் எப்போதும் போன்று விளையாட வேண்டும்.

தோனி தற்போது 2 மாதம் ராணுவ பணியில் உள்ளார். 2 மாதம் கழித்து அவர் பேசுவார் என நினைக்கிறேன். அவர் எப்போது முடிவெடுத்தாலும் சரியான முடிவைத்தான் எடுக்க வேண்டும்” என்றார்.

Also Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி...! கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்

Also Read : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்த மலிங்கா!

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: MS Dhoni