• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஓய்வு குறித்து தோனியிடம் தேர்வுக் குழு பேச வேண்டும் - சேவாக்

ஓய்வு குறித்து தோனியிடம் தேர்வுக் குழு பேச வேண்டும் - சேவாக்

தோனி

தோனி

  • News18
  • Last Updated :
  • Share this:
மகேந்திர சிங் தோனி ஓய்வு முடிவு குறித்து தேர்வு குழு அவரிடம் பேச வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது மிகப் பெரிய பேச்சு பொருளாக உள்ளது. ஆனால் தோனியின் ஓய்வு குறித்து அவரோ அல்லது பிசிசிஐ எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் அவர் அணியில் இடம்பெறுவாரா என்பது மகிப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அணி விரைவில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி வரும் 21ம் தேதி அறிவிக்கப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது. இந்திய அணியில் தோனி தொடர்வாரா என்ற கேள்விக்கான பதில் அன்று தெரிந்துவிடும்.

இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேவாக் தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “தோனியில் ஓய்வு முடிவை அவர் தான் எடுக்க வேண்டும். ஆனால் அவர் அணியில் தொடர்வாரா, பேட்ஸ்மேனா அவர் இருக்க வேண்டுமா என்ற நிலையை தேர்வுக்குழு அவரிடம் எடுத்து கூற வேண்டும். அது அவர்களின் கடமை“ என்றார்.

Also Read : எங்களுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும் - தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து

Also See...

பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதனால் எப்படி இருப்பார்கள்!



தோனியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்...!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: