ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மகள் ஜிவா எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு அல்ல.. என்னுடைய கடின முயற்சி - தோனியின் பதில் வைரல்

மகள் ஜிவா எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு அல்ல.. என்னுடைய கடின முயற்சி - தோனியின் பதில் வைரல்

கிரிகெட் வீரர் தோனி

கிரிகெட் வீரர் தோனி

தோனியிடம் “உங்களுக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு என்ன” என்று கேட்டப்படுகிறது. அதற்கு சற்று நேரம் தோனி யோசனையில் இருக்க, நெரியாளர் மந்திரா பேடி, ரகசியமாக, “உங்கள் மகள் என்று சொல்லுங்கள்..” என கூறுகிறார். அதற்கு தோனி இல்லை என தலையை அசைத்து, “என் மகள் எனக்கு பரிசு அல்ல.. அது விடாமுயற்சி” என்று பதிலளித்த வீடியோ வைரல்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  தொலைக்காட்சி தொடர், இந்தி, தமிழ் படங்களில் நடித்த பிரபலமான நடிகை மந்திரா பேடியின் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

  அந்த நிகழ்ச்சியில், தோனியிடம் “உங்களுக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு என்ன” என்று கேட்டப்படுகிறது.. அதற்கு சற்று நேரம் தோனி யோசனையில் இருக்கமந்திரா பேடி, ரகசியமாக, “உங்கள் மகள் என்று சொல்லுங்கள்..” என கூறுகிறார்.

  அதற்கு தோனி இல்லை என தலையை அசைத்து, “என் மகள் எனக்கு பரிசு அல்ல.. அது கடின முயற்சி” என்று பதிலளிக்க, அரங்கமே சிரிப்பலையில் ஆழ்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Also Read : டி20 உலக கோப்பையை மிஸ் செய்யும் நட்சத்திர வீரர்கள்..

  தோனியின் பதில்கள் எப்போதும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும். பல பத்திரிக்கையாளர்களுடனும், பல கிரிகெட் வீரர்களுடனும் அவர் தரும் ‘நச்’ பதில்கள் அதிகமாக வைரலாகும். ஆனால் இப்போது பேசிய தோனி, இரட்டை அர்தத்தில் பேசி இருக்கிறார். இதுவும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Mahendra singh dhoni, MS Dhoni, Ziva Dhoni