'அது மட்டும் நடக்கலனா, மேட்சே வேற லெவல்'- தோனி ரன்அவுட் குறித்து சச்சின் டாக்

#IPLFinal2019 | பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

'அது மட்டும் நடக்கலனா, மேட்சே வேற லெவல்'- தோனி ரன்அவுட் குறித்து சச்சின் டாக்
#IPLFinal2019 | பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
  • News18
  • Last Updated: May 13, 2019, 6:28 PM IST
  • Share this:
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கேப்டன் தோனி நூலிழையில் ரன் அவுட்டாகி ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கொடுத்தார்.

ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் பரபரப்பான கட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றி குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், “பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
கர்ணால் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் சென்னை அணி ரன்களைக் குவித்தாலும் அடுத்த இரண்டு ஓவர்களை பும்ரா, மலிங்கா நன்றாக வீசி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

Bumrah, Malinga
பும்ரா-மலிங்கா


கடைசி இரண்டு ஆட்டங்களில் மும்பை அணி குறைந்த வெற்றி இலக்கை கொண்ட போதும் திறமையான பந்துவீச்சால் வெற்றிப் பெற்றோம். ஆட்டத்தின் இரண்டாம் பகுதியே மிகச் சிறப்பாக அமைந்தது.

இந்தப் போட்டியில் தோனி ரன் அவுட்டானது தான் முக்கியமான ஒன்றாக இருந்தது. அவர் களத்தில் இருந்து இருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருப்பார்'' என்று சச்சின் கூறினார்.

Also Watch

First published: May 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading