ஓய்வு முடிவை தோனி அறிவிக்காவிட்டாலும், இந்திய அணியில் நீடிப்பது கடினமே...

தோனி ஓய்வு முடிவை அறிவிக்காத நிலையில், தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஓய்வு முடிவை தோனி அறிவிக்காவிட்டாலும், இந்திய அணியில் நீடிப்பது கடினமே...
மகேந்திர சிங் தோனி. (BCCI)
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டாலும், இனி அணியில் அவர் நீடிப்பது கடினமே என தேர்வுக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு சாதனைகளை புரிந்த முன்னாள் கேப்டன் தோனிக்கு 38 வயது ஆகிறது. நடப்பு உலகக்கோப்பை தொடரும் அவர் ஓய்வுபெறுவார் என பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில், அது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. இங்கிலாந்து உடனான லீக் போட்டியில் ரன் சேஸிங்கில் தோனி மந்தமாக ஆடியதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இனியும் தோனி ஓய்வு முடிவை அறிவிக்காத நிலையில், தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தோனி ஓய்வை அறிவிக்காவிட்டாலும், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் உள்பட அடுத்தடுத்து வரும் தொடர்களில் அணியில் தோனிக்கான நிர்ந்தர வாய்ப்பை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சாதாரண வீரர்களுக்கு நடத்தப்படுவது போன்று ஆட்டத்திறன் அடிப்படையிலேயே தோனியும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Watch Also
 
First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading