சென்னையில் தோனி - விழாக்கோலம் பூண்டது சேப்பாக்கம் மைதானம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார். 

சென்னையில் தோனி - விழாக்கோலம் பூண்டது சேப்பாக்கம் மைதானம்
தோனி
  • Share this:
ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக மஹேந்திரசிங் தோனி சென்னை வந்தடைந்தார்.

2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி வண்ணமயமாக தொடங்கவுள்ளது. கோடையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டிப்போடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒவ்வொரு ஆண்டும்  ஸ்பெஷல்தான். மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழா முடிந்து அரங்கேறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும்-சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முதல் போட்டியே விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமில்லாதது என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்களின் கூச்சல்களும் இப்போதிருந்தே ஒலிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்காக மஹேந்திரசிங் தோனி சென்னை வந்தடைந்தார். விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தோனிக்கு சிஎஸ்கே நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதிக்கு சென்ற தோனி, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்து ரசித்தார். தோனியின் சென்னை வருகையை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியுடன் களத்தில் தோனி விளையாடவில்லை. இதன்மூலம், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்ற ஏக்கத்திற்கு ஐபிஎல் தொடரே தோனியின் உலகக்கோப்பை டி20 வாய்ப்பை நிர்ணயிக்கும் என கூறியிருந்தார் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி. ஆகையால், இந்த ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை ரசிகர்கள் மட்டும் இல்லை, ஒட்டுமொத்த வீரர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அம்பத்தி ராயுடு, கரண் சர்மா, பியூஸ் சாவ்லா ஆகியோருடன் தோனி சென்னையில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். தோனியின் வருகையால், சென்னை சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கலாம்.
தோனியின் பயிற்சிக்கே மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்கு பின் அவரது முதல் ஆட்டத்தில் முதல் ஹெலிகாப்டர் ஷாட்டை காண காத்துள்ளனர்.சென்னையில் தோனி மார்ச் 19ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also See...
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading